லைப் ஸ்டைல் 18 Plus

செலவே இல்லாமல் அதை அனுபவிக்க வேண்டுமா.? இதோ ஈஸியான டிப்ஸ்!

Summary:

Healthy dating tips without spending more money

பொதுவாக காதலித்தாலே காதலியுடன் வெளியில் செல்ல வேண்டும் என்றுதான் அனைவரும் ஆசைப்படுவார்கள். ஆனால் சில சமயங்களில் நம்மிடம் இருக்கும் பொருளாதாரம் அதற்கு தடையாக அமைந்துவிடுகிறது. காதலியனுடன் வெளியில் சென்றாலே அதிகம் செலவாகிறது, அதை எப்படி சமாளிப்பது என்று என்னும் ஒவ்வொருவருக்கும் இந்த கட்டூரை பயனுள்ளதாக அமையும்.

டேட்டிங்கும் செய்ய வேண்டும் செலவும் ஆகக் கூடாது:

திரையரங்கு:
குறைந்த செலவில் நீண்ட நேரம் காதலியுடன் நேரம் செலவிட ஒரு நல்ல திரைப்படத்திற்கு செல்வது உங்கள் செலவை குறைக்கும். மேலும் நீங்கள் இருவரும் அதிக நேரம் செலவிட்டு, உங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும் இது பயனுள்ளதாக அமையும்.

பூங்கா:

பிகினிக், திரைப்படம் இவற்றையெல்லாம் விட உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் பூங்காவிற்கு செல்வது மேலும் உங்களது செலவை பலமடங்கு குறைக்க உதவும். உங்கள் காதலியும் இயற்கை அழகை ரசித்தவாறே உங்களுடன் நேரம் செலவிட பயனுள்ளதாக அமையும்.

ஒயின் சுவை:
பொதுவாக இரவு உணவு சாப்பிடும்போது உங்கள் துணையுடன் நீங்கள் செலவிடும் நேரம் மிகவும் அழகானது. அதுபோன்ற தருணங்களில் இரவு உணவு சாப்பிடும்போது துணையுடன் ஒரு கிளாஸ் வொயின் டின்னர் தயார் படுத்தி உணவருந்தலாம். இதுவும் டேட்டிங் உணர்வை உங்களுக்கு கொடுக்கும்.

திருவிழா:

பொதுவாக திருவிழாவில் நேரம் செலவிடுவது மிகவும் அழகான ஓன்று. நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் அருகில் உள்ள கிராமத்தில் நடைபெறும் திருவிழாக்களுக்கு சென்று அங்கு நடைபெறும் திருவிழாவில் காதலியுடன் கலந்துகொள்வது உங்கள் செலவை பலமடங்கு குறைக்க உதவும்.


Advertisement