தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் திடீர் மறைவு.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
வாவ்... இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் அருந்தும் நோன்பு கஞ்சியில் இவ்வளவு நன்மைகள் இருக்கா.?

எல்லா மதத்திலும் விரத முறை கடைப்பிடிக்கபடும். இந்துக்கள் மாலை அணிந்து விரதம் இருப்பார்கள், இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தின் போது 30 நாட்களும் நோன்பு இருப்பார்கள், அப்படி நோன்பு இருக்கும் போது உடலில் நீர்சத்து குறைந்து உடல் சோர்வாகாமல் இருக்க பள்ளிவாசலில் நோன்பு கஞ்சி வழங்கப்படும். அந்த நோன்பு கஞ்சியில் இருக்கும் நன்மைகள் என்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.
ரமலான் நோன்பு என்பது இஸ்லாமியர்களின் மிக முக்கியமான கடமை. இறை நம்பிக்கையுடன் அனைவரும் இதை முறையாகப் பின்பற்றுகின்றனர். ரமலான் நோன்பு என்பது எந்த உணவுக்கும் கட்டுப்பாடு என்பது இல்லை.ஏறத்தாழ 14 மணி நேரம் எந்த உணவும் எடுத்துக் கொள்ளாத நிலையில் உடல் உள்ளுறுப்புகள் மிகுந்த ஓய்வில் இருக்கும். இதனால், நோன்பு துறப்பின் போது எளிமையான உணவாக கஞ்சி அருந்துவது வழக்கம்.
மேலும், உடலுக்கு பலம் வேண்டும் என்பதால், அந்த கஞ்சியில் சத்துமிக்க பொருட்கள் சேர்க்கப்படுகிறது.காலியாக உள்ள வயிறு என்பதால், சஹர் உணவு வகையில், அதிக எண்ணெய் மற்றும் காரம் ஆகியன தவிர்க்க வேண்டும். தற்போது வெயில் காலம் என்பதால், அதிக நீர்ச்சத்து உடலுக்கு தேவை. நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து மிக்க காய்கறிகள், பழங்கள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிகளவில் நீர் பருக வேண்டும். உணவில் மோர் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அசைவ உணவு என்றாலும் அதில் இறைச்சி அளவு குறைவாக இருக்க வேண்டும். நோன்பு கடைப்பிடிப்பது என்பது மனதுக்கும் உடலுக்கும் நன்மை தரக்கூடிய விஷயம். எதை வேண்டுமானாலும் உண்ணலாம் என்ற நிலையில் குறிப்பிட்ட நேரம் நோன்பு கடைப்பிடிப்பதும், குறிப்பிட்ட நேரம் மட்டுமே உணவு எடுத்துக் கொள்வது போன்ற பல விஷயங்கள் இஸ்லாமியர்களால் பின்பற்றப்பட்டு வருகிறது.
மாலையில் இஃப்தார் எனப்படும் நோன்பு திறக்கும் நேரத்தில் உடலின் நீர்ச்சத்து குறைந்து நாவரட்சி ஏற்பட்டு, உடலின் சர்க்கரை பகல் முழுதும் பயன்படுத்தப்பட்டதால் சிலருக்கு சோர்வு, தலைவலி ஏற்படும். இந்நிலையில் சோர்வுற்ற உடலுக்குத் தேவையான உடனடி புத்துணர்வை வழங்க அருமையான ஆகாரமாக நோன்பு கஞ்சி இருக்கிறது. உடல் சூட்டைத் தணித்து ஊட்டம் தரும் .
ரம்ஜான் மாதத்தில் அரை நாளுக்கும் கூடுதலாக நோன்பிருக்கிறோம். வருடத்தின் 11 மாதங்களில் தேங்கிய கொழுப்பை மறுசுழற்சி செய்ய நோன்பு மருத்துவ ரீதியில் உதவுகிறது. அத்துடன் உடல் சூட்டையும் தணித்து ஊட்டம் தருகிறது.