மருத்துவம் லைப் ஸ்டைல்

பயத்தை விடுங்க!! வீட்டில் சாதாரணமாக கிடைக்கும் இந்த 5 உணவுகள் உங்கள் கல்லீரலை அரணாக காக்கும்!!

Summary:

நமது கல்லீரலை பாதுகாக்கும் சில முக்கியமான உணவுகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

நமது கல்லீரலை பாதுகாக்கும் சில முக்கியமான உணவுகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

நமது உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்புகளும் மிகவும் முக்கியமானது. அதிலும் மிக முக்கியான உறுப்புகள் ஒன்றுதான் இந்த கல்லீரல். நொதிகளை செயல்படுத்துவது, இரத்தத்தின் அழுக்கை நீக்குவது, உடலில் இருந்து நச்சுகளை அகற்றுவது என நமது உடலில் பல இன்றியமையாத வேலைகளை செய்துவருகிறது கல்லீரல்.

ஆனால் நாம் செய்யும் சில தவறுகளால் நமது கல்லீரல் பாதிக்கப்பட்டு பிற்காலத்தில் பல்வேறு உடல்நல கோளாறுகளை ஏற்படுத்திருக்கிறது. குறிப்பாக எண்ணெயில் பொறித்த உணவுகள், அதிகப்படியான புகை பழக்கம், உடற்பயிற்சி இன்மை போன்றவை நமது கல்லீரலை வெகுவாக பாதிக்கிறது.

சரி, இந்த கல்லீரலை பாதுகாக்க நாம் என்ன மாதிரியான உணவுகளை சாப்பிடலாம் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

1 . க்ரீன் டீ:
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகமாக இருக்கும் க்ரீன் டீ கல்லீரலுக்கு அதிக பயனை தருகிறது. கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை அகற்ற இந்த க்ரீன் டீ முக்கிய பங்காற்றுகிறது. எனவே நாள் ஒன்றுக்கு 2-3 கப் கிரீன் டீ குடிப்பது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

2 . பீட்ரூட்:
பீட்ரூட்டை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. பீட்ரூட் கல்லீரல் மற்றும் இரத்தம் இரண்டையும் சுத்தம் செய்து கல்லீரலை அரணாக காக்கிறது.

3 . கேரட்:
நமது உடலுக்கு பல்வேறு சக்திகளை கொடுக்க கூடிய கேரட் நமது கலீரலுக்கும் பெரிதும் பயனளிக்கிறது. கேரட்டில் இருக்கும் குளுதாதயோன், பீட்டா கரோட்டின், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்டமின் ஈ, பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நமது கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

4 . வெங்காயம்:
வெங்காயமும் நமது கல்லீரலை பாதுகாக்கும் முக்கிய உணவாக கருதப்படுகிறது. வெங்காயத்தில் இருக்கும் அதிகப்படியான கந்தகம், பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு ஆகிய பண்புகள் நமது கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை போக்கி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

5 . எலுமிச்சை:
ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் உள்ள பழங்களில் எலுமிச்சையும் ஒன்று.  ஆன்டிஆக்ஸிடன்ட் போக, எலுமிச்சை பழத்தில் இருக்கும் வைட்டமின் சி-யும் நமது கலீரலில் இருக்கும் நச்சுகளை அகற்றுவதோடு, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது.


Advertisement