Health Tips: கல்லீரல் பிரச்சனையை வீட்டிலிருந்தே சரி செய்வது எப்படி.?

Health Tips: கல்லீரல் பிரச்சனையை வீட்டிலிருந்தே சரி செய்வது எப்படி.?


Health Tips bitter gourd juice benefits

தினமும் ஒரு கப் பாகற்காய் ஜுஸ் குடித்து வந்தால் கல்லீரல், நீரிழிவு, ஆஸ்துமா, இருமல், மலச்சிக்கல் போன்ற உடலில் ஏற்படக்கூடிய கோளாறுகள் அனைத்தும் நீங்கி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த வழிவகை செய்கிறது.

பாகற்காய் ஜுஸ் தயார் செய்வது எப்படி என்று இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பாகற்காய் - 2
எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
தேன் – 1 டீஸ்பூன்
மிளகு தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
ஐஸ் கட்டிகள் – தேவையான அளவுBitter gourd juice

 

முதலில் பாகற்காயை விதை நீக்கி தோல் சீவி எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு மிக்ஸியில் பாகற்காயை சேர்த்து அதனுடன் தேன், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்கு கலந்து, ஐஸ் கட்டிகளைப் போட்டு குடிக்க வேண்டும். அவ்வளவுதான் நொடியில் தயாராகி விடும் பாகற்காய் ஜுஸ்.