பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? மிஸ் பண்ணிடாதீங்க!

பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? மிஸ் பண்ணிடாதீங்க!



health-benefits-of-ponnanganni-keerai

பொதுவாக பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகளை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். எனவே அன்றாட உணவில் கீரைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறுகின்றனர்.

எனவே, பொன்னாங்கண்ணிக் கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம். பொன்னாங்கண்ணிக் கிரியையில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

Ponnanganni keerai

பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது. மேலும், இதில் இரும்பு சத்து நிறைந்துள்ளதால் ரத்த சோகையை குறைக்க உதவுகிறது.

பொன்னாங்கண்ணி கீரையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி சரும ஆரோக்கியத்தை பாதுகாத்து, வயதான தோற்றத்தை தடுக்க உதவுகிறது. அதேபோல் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், முடி உதிர்தலை தடுக்கவும் உதவுகிறது.

Ponnanganni keerai

பொன்னாங்கண்ணிக் கீரை சாப்பிடுவதால் கண் பார்வைக்கு மிகவும் நல்ல பலன் கொடுக்கிறது. அதன்படி இதில் உள்ள வைட்டமின் ஏ கண் முறை மற்றும் கண் எரிச்சல் போன்ற பிரச்சினைகளை தடுக்க உதவுகிறது. அதேபோல் மூட்டு வலி மற்றும் வீக்கத்தை குறைக்க பயன்படுகிறது.

பொன்னாங்கண்ணிக் கீரை சாப்பிடுவதால் மாதவிடாய் பிரச்சனைகளை சீராக்கி, வலி மற்றும் அசௌகரியத்தை குறைக்க உதவுகிறது. மேலும் சிறுநீரக கற்களை கரைக்கவும், சிறுநீர் பாதை நோய் தொற்றுகளை தடுக்கவும் உதவுகிறது.