நடிகர் அஜித்துடன் பிரபல இசையமைப்பாளர் திடீர் சந்திப்பு.! அட.. அவர்கள் பேசிய டாபிக்தான் வேறலெவல்!!
அண்ணா பல்கலை., குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்திரவிட்டுள்ளது.
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவி, ஞானசேகரன் என்பவரால் கடந்த ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதனால் பாதிக்கப்பட்ட மாணவி இது குறித்து புகாரளித்ததன் பேரில், கோட்டூர்புரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து பிரியாணி கடை நடத்தி வந்த ஞானசேகரனை கைது செய்தனர்.
சிறப்பு புலனாய்வு குழு :
இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஞானசேகரன் அரசியல் கட்சியை சேர்ந்தவர் என்பதால் சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றக் கோரி சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்ததை தொடர்ந்து, அதிகாரிகள் குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இதையும் படிங்க: படிப்படியாக உயரும் தங்கத்தின் விலை.. இன்றைய தங்கம் விலை என்ன?.. விவரம் உள்ளே.!!
நீதிமன்ற தீர்ப்பு :
இதனை தொடர்ந்து சென்னை மகளிர் நீதிமன்றத்தில் கடந்த மார்ச் முதல் விசாரணை நடந்து வந்த நிலையில், மே 28ஆம் தேதியன்று 11 சட்ட பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தண்டனை விபரமானது ஜூன் 2 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.
தண்டனை விபரம் :
இந்த நிலையில், ஜூன் 2 ஆம் தேதியான இன்று குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கும் குறையாத நிபந்தனையுடன் ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி உத்தரவிட்டுள்ளார். மேலும் ரூ.90,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.