15 நிமிட போராட்டத்திற்கு பிறகு காம கொடூரர்களின் பிடியிலிருந்து தப்பிய 21 வயது கல்லூரி மாணவி! போபாலில் பரபரப்பு
15 நிமிட போராட்டத்திற்கு பிறகு காம கொடூரர்களின் பிடியிலிருந்து தப்பிய 21 வயது கல்லூரி மாணவி! போபாலில் பரபரப்பு

போபாலில் கூட்டு பலாத்காரம் செய்ய முயன்ற 3 பேரிடம் இருந்து 21 வயது கல்லூரி மாணவி அவர்களை கற்களால் தாக்கி தப்பித்துள்ளார். இந்த கயவர்களிடம் 15 நிமிடங்கள் போராடியவர் பக்கத்து வீட்டில் இருந்தவர்களின் ஆதரவுடன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை இரவு போபால் கோவிந்தபுரா பகுதியிலுள்ள ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு வீட்டிலிருந்து அந்தப் பெண் தப்பித்து ஓடி வந்து அருகில் உள்ள வீட்டில் இருந்தவர்களிடம் நடந்ததைப் பற்றி கூறியுள்ளார். அதனைத்தொடர்ந்து அந்த வீட்டில் இருந்தவர்கள் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் அங்கு வந்த காவல்துறையினர் அந்த பெண்ணிடம் நடந்த சம்பவத்தை பற்றி விசாரித்துள்ளனர்.
அப்போது அந்த பெண் அவரை பலாத்காரம் செய்ய முயன்ற 3 பேரில் ஒரு நபரை சில வருடங்களாகவே நன்றாக தெரியும் என கூறியுள்ளார். அந்த நபர் தான் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9 மணி அளவில் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு அருகிலுள்ள மருந்து கடைக்கு வரச் சொல்லியுள்ளார். அவருக்கு கல்லூரி சம்பந்தமாக சில குறிப்புகளை தருவதாகும் மேலும் அவரது உறவினர் ஒருவரை அறிமுகம் செய்யப்போவதாகவும் அந்த நபர் பெண்ணிடம் கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து மருந்து கடைக்கு புறப்பட்ட அந்த பெண்ணை அந்த நபர் இன்னும் சற்று தொலைவில் உள்ள ஒரு சப்பாத்தி கடைக்கு வர கூறியுள்ளார். அத்தனையும் நம்பி அங்கு சென்ற பெண்ணை அந்த நபர் ஸ்கூட்டரில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். அப்போது அந்த நபர் வண்டியை குறுக்குமறுக்காக அங்கும் இங்கும் ஓட்டிக்கொண்டு சென்றுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அந்த பெண் தாங்கள் தரவிருந்த குறிப்புகள் மற்றும் உங்கள் உறவினர் எங்கே என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தநிலையில் 40 நிமிட பயணத்திற்கு பிறகு அந்த நபர் மீண்டும் அதே சப்பாத்தி கடைக்கு அந்த பெண்ணை அழைத்து வந்துள்ளார். அப்போது அங்கே அந்த நபரின் மேலும் இரண்டு நண்பர்கள் காத்துக்கொண்டிருந்தனர். இதனை பார்த்த அந்த பெண் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார். அங்கிருந்து தப்பிக்க முயன்ற அந்த பெண்ணை அந்த மூவரும் வலுக்கட்டாயமாக கடத்தி ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பழைய வீட்டிற்குள் தூக்கிச் சென்றனர்.
அங்கு அவர்கள் அந்த பெண்ணை அடித்தும், அவளது ஆடைகளைக் கிழித்தும் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளனர். ஆனால் அந்த பெண் அவர்களை விடுவதாயில்லை. கிட்டத்தட்ட 15 நிமிடங்களுக்கு மேல் அவர்களுடன் அந்தப் பெண் போராடியுள்ளார். கடைசியில் அவரது கையில் கிடைத்த கற்களை கொண்டு அந்த நபர்களை தாக்கிய பெண் அந்த வீட்டில் இருந்து தப்பி ஓடி அருகில் இருந்த வீட்டில் தஞ்சம் அடைந்தார். அந்த வீட்டில் இருந்தவர்களின் உதவியுடன் காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்தார். அதனைத் தொடர்ந்து வந்த காவல்துறையினர் அந்த மூவரையும் அடுத்த ஒரு மணி நேரத்தில் கைது செய்தனர்.