முகம் எப்பொழுதும் பொலிவாக இருக்க வேண்டுமா.! இந்த விஷயங்களை எல்லாம் செய்யாதீங்க.?

முகம் எப்பொழுதும் பொலிவாக இருக்க வேண்டுமா.! இந்த விஷயங்களை எல்லாம் செய்யாதீங்க.?



Face brightness tips

சருமம் எப்பொழுதும் பொலிவுடன் இருக்க பலவிதமான அழகு சிகிச்சைகள் செய்து கொள்கின்றோம். குறிப்பாக பெண்கள் அழகு விஷயத்தில் கண்ணும் கருத்துமாக இருந்து வருவார்கள். சருமம் பொலிவுடன் காணப்படுவதற்கு ஒரு சில விஷயங்கள் செய்வதை தவிர்க்க வர வேண்டும்.

face

1. முகத்தில் அடிக்கடி ஸ்க்ரப்களை உபயோகப்படுத்தக் கூடாது. இவைகள் நம் உடலில் இருக்கும் தேவையான எண்ணெய் பசைகளை நீக்கிவிடும். இதனாலும் முகத்தில் பருக்கள் தோன்ற வாய்ப்பு உண்டு.

2. முகத்தில் பருக்கள் ஏற்பட்டால் அதனை கிள்ளிவிடக்கூடாது. இதனால் கரும்புள்ளி போன்று முகத்தில் காணப்படும். தானாகவே மறையும் வரை எதையும் செய்யாமல் இருப்பது நல்லது.

3. தூங்கச் செல்வதற்கு முன்பு காண்டாக்ட் லென்ஸ், மேக்கப் போன்றவற்றை ரிமூவ் பண்ணிவிட்டு தான் தூங்க வேண்டும். இல்லை என்றால் முகத்தில் அழுக்கு சேர்ந்து பொலிவின்றி காணப்படும்.

face

4. உலர் திராட்சையை இரவில் ஊற வைத்து பகலில் சாப்பிட்டு வருவதால் சருமத்தில் நல்ல மாற்றத்தை காணலாம்.