இல்லத்தரசிகளே இனி இப்படி செஞ்சு பாருங்க... சமையலில் ருசியை அதிகரிக்க உதவும் ரகசிய குறிப்புகள்....

இல்லத்தரசிகளே இனி இப்படி செஞ்சு பாருங்க... சமையலில் ருசியை அதிகரிக்க உதவும் ரகசிய குறிப்புகள்....


Easy Samayal tips

சமையலில் இன்னும் கூடுதலான ருசியை கொடுக்க முடியும். எதை செய்தால்? எந்த சமையல் ருசி கூடும்? என்பதை தெரிந்து வைத்து சமைக்கும் பொழுது தான் அந்த சமையலில் உயிரோட்டம் இருக்கும். இன்றைய இளம் தாய்மார்களுக்கு தேவைப்படக் கூடிய ருசி கூட்டக் கூடிய அட்டகாசமான குறிப்புகள் இதோ உங்களுக்காக

1. பருப்பு சேர்த்து கீரை கடையும் பொழுது கொஞ்சம் பால் சேர்த்து கடைந்தால் ருசி கூடுதலாக இருக்கும்.
2. தோசை மாவு தனியாக அரைக்கும் பொழுது அதனுடன் கொஞ்சம் வெண்டைக்காய் துண்டுகளை சேர்த்து அரைத்து பாருங்கள், தோசை மிருதுவாக மெத்தென்று வரும்.

Samayal
3. சப்பாத்தி செய்யும் பொழுது மாவுடன் கொஞ்சம் சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை பொடித்து சேர்த்தால் மிருதுவான சுவை மிகுந்த சப்பாத்தி தயார்! இவை எளிதில் ஜீரணமாகக் கூடியது ஆகும்.
4. ரவா லட்டு தயாரிக்கும் பொழுது சுவை கூடுதலாக இருப்பதற்கு மிக்ஸியில் கொஞ்சம் அவலை போட்டு அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் நெய்யில் வறுத்து லட்டு பிடித்தால் ருசியாக இருக்கும். கூடுதலாக பால் பவுடர் சேர்த்து செய்யும் பொழுது ரவா லட்டு இன்னும் ருசிக்கும்.

Samayal
5. ஆப்ப மாவு கொண்டு ஆப்பம் சுடுவதற்கு முன்பு மாவில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்கு கோதுமை மாவு சேர்த்து கலந்தால் சீக்கிரம் ஆப்பம் காயாமல் இருக்கும்.
6. புதினா துவையல், கொத்தமல்லி துவையல் போன்றவற்றை செய்யும் பொழுது புளி சேர்ப்பதற்கு பதிலாக மாங்காய் துண்டுகளாக வெட்டி சேர்த்து அரைத்து பாருங்கள். சுவையும், மணமும் அட்டகாசமாக இருக்கும்.