ஒவ்வொரு ஆண்களும் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம்!. மனைவியிடம் இதை எதிர்பார்க்காதீர்கள்!.

ஒவ்வொரு ஆண்களும் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம்!. மனைவியிடம் இதை எதிர்பார்க்காதீர்கள்!.


Don't expect these things from your wife

பொதுவாக பெண்களுக்கு ஆண்கள் மீது அக்கறை காட்டுவதில் சற்று காலதாமதம் ஏற்படும். அதை கணவன்மார்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் பெண்களுக்கு கணவனை மட்டும் கண்டுகொள்வது வாழ்க்கை அல்ல. அவர்களுக்கு, குடும்பத்தில் நிறைய பொறுப்புகள் இருக்கும்.

husband and wife

பெண்களுக்கு கணவனை மட்டும் திருப்தியோ அல்லது சந்தோசமோ படுத்துவது மட்டும் அவர்களது கடமை அல்ல, இதையும் தாண்டி அவர்களுக்கு குடும்பத்தில் நிறைய கடமைகள் உள்ளன. அதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

பொதுவாக அலுவலகத்தில் பணிபுரியும் கணவன்மார்கள், அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வந்த உடன் தன்னை தனது மனைவி சந்தோஷப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். ஆனால் அவர்களுக்கு வீட்டில் என்ன வேலைகள் இருக்கும் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை.

husband and wife

பொதுவாக ஆண்கள் வீட்டில் மனைவி மட்டுமின்றி, பெற்றோர்களிடமும் அலுவலகத்தில் உள்ள கோபத்தை வீட்டில் வந்து காட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் தனது கணவன் மாமனார் மாமியாரை கோபபடுத்தி விட்டால் அதனை சமாதானப்படுத்துவது அவர்களின் மனைவியாகவே உள்ளனர்.

பொதுவாக ஆண்களை விட பெண்களுக்கு நிறைய சிரமங்கள் உள்ளன அதை நம்மிடம் வெளிப்படுத்த மாட்டார்கள் அதை நாமே புரிந்து கொண்டு அவர்களுக்கு மிகவும் உதவி செய்ய கடமை பட்டிருக்கவேண்டும்.