வாந்தி எடுக்கும்பொழுது இதனைமட்டும் செய்யாதீர்கள்! உயிருக்கே ஆபத்து!

வாந்தி எடுக்கும்பொழுது இதனைமட்டும் செய்யாதீர்கள்! உயிருக்கே ஆபத்து!


don't do this habit when vomitting

 


வாந்தி என்பது ஒரு தனிப்பட்ட நோயல்ல. நோய் வருவதற்கான ஓர் அபாய அறிவிப்பு. குறிப்பாக, வயிறு சரியில்லை என்பதை நமக்குத் தெரிவிக்கும் எச்சரிக்கை மணியாக இதை எடுத்துக்கொள்ளலாம். உடலில் வாந்தி ஓர் அனிச்சைச் செயல் போல் ஏற்படுகிறது. 

வயிற்றில் தேவையில்லாமல் இருக்கிற உணவையோ, நச்சுப்பொருளையோ வெளியே தள்ள ஒரு சில முறை வாந்தியெடுப்பது நல்லதுதான். ஆனால் ஒரு நாளில் நான்கு அல்லது ஐந்து முறை தொடர்ச்சியாக வாந்தி எடுத்தால், உடலில் இருக்கும் தண்ணீர்ச் சத்து குறைந்து, உடல் சோர்ந்து ரத்த அழுத்தம் குறைந்துவிடும். 

vomit

வாந்தி எடுக்கும்பொழுது வாயை மூடுவது தவறான செயல். வீட்டில் படுத்திருக்கும்பொழுது வாந்தி எடுத்தால் மெத்தை வீணாகி விடுமோ என்று வையை  பொத்தி குளியலறைக்கு செல்வோருக்கு உயிருக்கே ஆபத்து. ஆம் வாந்தி எடுக்கும் பொழுது வாயை மூடினால் வாந்தியானது நேரடியாக சுவாச குழாய்க்குள் சென்று மூச்சு திணறல் ஏற்பட்டு உயிர் பிரியும் அபாயம் உண்டாகும்.

எனவே குழந்தைகக்கு  வாந்தி வந்தால் உடனே எடுக்க வையுங்கள் இடம்,துணி,மெத்தை,இருக்கைகள் வீணாகி விடும் என்று வாயை பொத்தி கொண்டு நீண்ட நேரம் செல்ல வேண்டாம். இடம் ,பொருள் அசுத்தமானால் சுத்தம் செய்திடலாம். குழந்தையின் உயிர் போனால் திரும்பி வராது எனவே கவனமாய் இருங்கள்.