டுவிஸ்ட் நீ மட்டுந்தான் குடுப்பியா; இப்ப நான் டுவிஸ்ட் அடிக்கறேன் பாரு.... வைரலாகும் நாயின் அட்டகாச வீடியோ..!
தன்னுடைய செல்ல பிராணிக்கு போக்கு காட்டிய எஜமானருக்கு போக்கு காட்டி பதுங்கிய நாய் ஒன்றின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாம் ஒவ்வொருவருமே குழந்தை பருவம் முதல் பதின்ம பருவம் வரையிலும் விளையாடி இருப்போம். ஒவ்வொரு வயதிலும் விளையாட்டு அந்த வயதுக்கு ஏற்றாற் போல் மாறும். குழந்தை பருவத்தில் கிலுப்பை ஓசைக்கு சிரித்தவர்கள் தான் இன்று ஐ.பி.எல் கிரிக்கெட் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறோம்.
விளையட்டுகள் எப்போதுமே மனதிற்கு மகிழ்ச்சியை தரவல்லது, மேலும் அது உடலுக்கும் வலிமையை தருகிறது. சிறுவயதில் கண்ணாம்மூச்சி, ஓடிப்பிடித்து விளையாடுதல், கோலிக் குண்டு, கில்லி தாண்டுதல், போன்ற விளையாட்டுகளை விளையாடதவர்கள் யாரும் இருக்க முடியாது.
பின்பு பள்ளி பருவத்தில் கபடி, கால் பந்து (Football), கை பந்து (Volleyball), கோக்கோ மற்றும் கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளை ரசித்து விளையாடியவர்கள் ஏராளம். அதனையும் தாண்டி அந்த விளையாட்டுகளை தன் வாழ்க்கையாக நினைத்து அதற்காக பயிற்சி பெற்று விளையாட்டில் சாதித்தவர்களும் உள்ளனர்.
எந்த வயதினரும் செய்யக்கூடியதாக விளையாட்டு எப்போதுமே இருக்கிறது. அதுவும் உங்கள் மனதிற்கு நெருக்கமானவர்களுடன் விளையாடும் போது அது கூடுதல் மகிழ்ச்சியை கொடுக்கும். இன்னும் சிலர் தங்களது செல்லப்பிராணிகளுடன் விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த வைரல் வீடியோவில் இடம்பெற்றுள்ள நாயும் அதன் எஜமானரும் அப்படிதான். தன் செல்லப்பிரணிக்கு போக்கு காட்ட சில சேட்டைகளை செய்யும் அவர் பின்னர் ஒரு ப்ரிட்ஜ் மறைவில் ஓடி பதுங்கிக் கொள்கிறார். நாய் தன்னை தேடும் என்று நினைத்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
Plot twist..🐕🐾🧍😂😂 pic.twitter.com/N6vgl0hluM
— 𝕐o̴g̴ (@Yoda4ever) May 11, 2022
தன் எஜமானர் பதுங்கிக் கொண்டார் என்பதை உணர்ந்த அந்த நாய் இன்னொரு அறைக்கு ஓடி கதவை மூடிவிடுவதை பார்க்க சுவாரசியமாக உள்ளது. பின்னர் நாய் தன்னை தேடாததை அறிந்து அவர் நாயை தேடுகிறார். அப்போது அந்த நாய் ஓடிவந்து அவர் மீது தாவி ஏறிக்கொள்கிறது. இந்த வீடியோ காட்சி பார்ப்பவர்களுக்கு மகிழ்ச்சியையும் சுவாரசியத்தையும் அளிக்கும் என்பதில் ஐயமில்லை.