எச்சரிக்கை! முகங்களை மாற்றும் பேஸ் ஆப்பால் இவ்வளவு பெரிய ஆபத்தா!Disadvantages of faceapp

சமீபத்தில் மிகவும் பிரபலமாகி வரும் மொபைல் செயலிகளில் ஒன்று பேஸ் ஆப். இந்த ஆப்பால் சில பிரச்சினைகளும் உள்ளதை யாரும் கண்டுகொள்வதில்லை. 

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பேஸ் ஆப் ஒரு சில பயனாளர்களால் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. காரணம் ஆரம்பத்தில் பெரிய அளவில் விளம்பரங்கள் செய்யப்படவில்லை. 

Faceapp

ஆனால் தற்போது உலகில் மிகவும் பிரபலமானவர்களின் இளம்வயது புகைப்படங்களை கொண்டு அவர்கள் வயதானால் எப்படி இருப்பார்கள் என்பதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த பேஸ் ஆப் அனைவரின் மத்தியிலும் மிகவும் பிரபலமாகி வருகிறது. 

இந்த ஆப் மூலம் உருவாக்கப்படும் புகைப்படங்கள் பார்ப்பதற்கு நகைச்சுவையாகவும் கேலியாகவும் இருந்தாலும் இதனால் சில நன்மைகளும் தீமைகளும் உள்ளன. சிறுவயதில் காணாமல் போன ஒருவரை 18 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்க இந்த ஆப் உபயோகமாக இருந்துள்ளது. 

Faceapp

ஆனால் கண்ணுக்கு தெரியாத சில ஆபத்துகளும் இந்த பேஸ் ஆப்பில் இருப்பதை பலரும் உணர்வதில்லை. குறிப்பாக, பயனாளர்கள் அப்லோடு செய்யும் புகைப்படங்களுக்கு எந்தவித பாதுகாப்பும் கிடையாது. பேஸ் ஆப்பின் விதிமுறைப்படி நாம் அப்லோடு செய்யும் புகைப்படங்களை அவர்கள் எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும். இதற்கான ஒப்புதலை ஆப்பினை முதல் முறை பயன்படுத்தும் போது நாம் தான் கொடுக்கிறோம். 


எந்த ஒரு புதிய ஆப்பினை பயன்படுத்தும் முன்பு அதில் கொடுக்கப்பட்டுள்ள டேர்ம்ஸ் அன்ட் கண்டிஷனை தெளிவாக படித்து புரிந்துகொள்வது அவசியம்.