ஆட்டுக்குட்டியை சுற்றி வளைத்து விழுங்க முயன்ற ராட்சத மலைப்பாம்பு! அடுத்து நடந்த அதிர்ச்சி!



mountain-snake-attacks-goat-kovai

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை மூலத்துறை பகுதியில் வனப்பகுதியை ஒட்டியுள்ளதால், வனவிலங்குகளின் நடமாட்டம் இயல்பாகவே அதிகமாகவே காணப்படுகிறது.

மலைப்பாம்பின் திடீர் தாக்குதல்

முன்தினம் மூலத்துறை பவானி ஆற்றுப்படுகையில் ஆடுகள் மேய்ந்துகொண்டிருந்த சமயம், புதரில் இருந்து சுமார் 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று திடீரென வெளியேறி, புற்களை மேய்ந்து கொண்டிருந்த ஒரு ஆட்டுக்குட்டியை தாக்கியது. பாம்பு அதை விழுங்க முயன்றதால், ஆட்டுக்குட்டி கடுமையாகப் போராடியது. ஆனால், பாம்பு அதனை தனது உடலில் முழுமையாகச் சுற்றிக் கொண்டது.

பொதுமக்களின் மீட்புப் போராட்டம்

இந்தக் காண்டத்தை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், மலைப்பாம்பை விரட்ட முயற்சித்தனர். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, பாம்பு ஆட்டுக்குட்டியை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பியது.

இதையும் படிங்க: பூனையை கைது செய்த போலிசார்! பூனை செய்த தவறு என்ன தெரியுமா?

ஆட்டுக்குட்டியின் மரணம் மற்றும் வைரல் வீடியோ

தப்பிக்க முயன்றும், இந்த சம்பவத்தில் ஆட்டுக்குட்டி உயிரிழந்தது. அந்தக் கணங்களை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்திருந்தார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாக பரவி வருகிறது.

 

இதையும் படிங்க: வேகத்தடையை கடந்த ஆம்புலன்ஸ்! திடீரென கீழே விழுந்த நோயாளி! அதிர்ச்சியான வாகன ஓட்டிகள்! பதறவைக்கும் சம்பவம்...