30 வயதிற்கு மேற்பட்ட பெண்களே உஷார்.! இனி அலட்சியம் செய்யாதீர்கள்.!



dear women do not ignore yourself

சமீபத்திய ஆய்வு ஒன்றில் 30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளாமல் இருப்பதால் பின்நாளில் மிகப்பெரிய உடல் பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர் என்பது தெரியவந்துள்ளது. இந்த காலகட்டத்தில் எலும்பு பலவீனம், ஹார்மோன் மாற்றங்கள், மன அழுத்தம், தூக்கமின்மை, ரத்த சோகை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும்.

Women

இவற்றை அலட்சிய படுத்தாமல் சில பழக்கங்களை மேற்கொள்வதன் மூலம் நம் ஆரோக்கியத்தை காப்பாற்றிக் கொள்ள முடியும். உடலுக்கு ஊட்டச்சத்துக்களை கொடுக்கும் பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள், கீரைகள், பருப்பு வகைகள் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். 

இதையும் படிங்க: 40 வயதிலும், 20 வயது இளமை தோற்றம்.. இந்த 3 விஷயங்களை செஞ்சா போதும்.!

அன்றாடம் குறைந்தது 30 நிமிடங்கள் நடைப்பயிற்சியும், யோகா அல்லது ஏதாவது ஒரு உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது. உடலுக்கு தேவையான தூக்கம் இல்லாதது, மன அழுத்தத்தை அதிகரித்து பதற்றம், மன கவலை உள்ளிட்டவற்றை ஏற்படுத்தும். எனவே, குறைந்தது 7 மணி நேரமாவது ஆழ்ந்து உறங்குவது அவசியம்.

Women

ஒரு நாளைக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். உடல் நலத்தை மட்டும் கவனத்தில் வைத்தால் போதாது. மனம் புத்துணர்ச்சியாகவும், நிம்மதியாகவும் இருக்க அன்றாடம் தியானம் செய்வது, புத்தகம் வாசிப்பது, அல்லது பிடித்த இசையை கேட்பது போன்ற செயல்களில் ஈடுபடலாம். 

மேற்கண்ட விஷயங்களை கடைபிடிப்பதன் மூலம் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதுடன் மனமும் நிம்மதியாக இருக்கும். நாம் நம்மை கவனித்துக் கொண்டால் தான், நம் குடும்பமும் நம் குழந்தைகளும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். எப்பொழுதும் குடும்பம், குழந்தை என்று நம் உடல் நலத்தை அலட்சியம் செய்யக்கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க: உங்கள் வயதுக்கு ஒரு நாளுக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்கனும் தெரியுமா.?!