நடிகர் அரவிந்த் சாமியின் அப்பா யார் தெரியுமா? பலரும் அறியாத உண்மை!
உங்கள் வயதுக்கு ஒரு நாளுக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்கனும் தெரியுமா.?!
ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருக்க 8 டம்ளர் தண்ணி குடிக்க வேண்டும் என்று கூறுவது எந்த அளவிற்கு உண்மை என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
நமது உடல் ஆரோக்கியமாக இருக்க உணவு எவ்வளவு முக்கியமோ? அதைவிட தண்ணீர் முக்கியம். உடலில் தாகம் எடுத்தால் மட்டும்தான் நாம் தண்ணீர் குடிக்கிறோம். உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க, அழகை மேம்படுத்த ஒரு நாளைக்கு 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. உடலுக்கு தண்ணீர் அவசியம் தான். ஆனால் வாழ்க்கை முறை, வயது மற்றும் காலநிலை ஆகியவற்றை பொறுத்து எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை நிர்ணயிக்க வேண்டும்.
4 முதல் 14 வயது கொண்ட குழந்தைகள் ஒரு நாளைக்கு 1-லிருந்து 2.5 லிட்டர் வரை தண்ணீர் குடித்தால் போதும். வெயிலில் அதிக நேரம் விளையாடினால் இந்த வரையறையை தாண்டி தண்ணீர் குடிக்கலாம்.
இதையும் படிங்க: 10 கிலோ வரை எடை குறைய உதவும் நீர்.. எப்படி பயன்படுத்துவது.?!
14 முதல் 18 வயது கொண்ட சிறுவர்கள் ஒரு நாளைக்கு 3.3 லிட்டர், தண்ணீர் குடிக்க வேண்டும். அதே வயது கொண்ட சிறுமிகள் 2.3 லிட்டர் தண்ணீர் குடித்தால் போதும். கூடுதலாக நீர் சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை எடுத்துக் கொள்வது நல்லது. உடற்பயிற்சி அல்லது கடுமையான உடல் உழைப்பு கொண்ட பெண்களோ, ஆண்களோ இதைத் தாண்டி அதிக தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம்.

நம் உடலுக்கு தேவையான தண்ணீர் கிடைக்கிறதா என்பதை உணர்ந்து கொள்ள உதவுவது சிறுநீர் தான். அந்த சிறுநீர் வெள்ளை நிறத்தில் போகாமல் மஞ்சள் நிறத்தில் சென்றால் நாம் இன்னும் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று புரிந்து கொள்ளலாம்.
18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் ஒரு நாளைக்கு 3.3 முதல் 4.3 லிட்டர் தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம். கடுமையாக உடல் உழைப்பு இருந்தால், 4 லிட்டருக்கு குறையாமல் தண்ணீர் குடிக்க வேண்டும்.
தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் ஒரு நாளைக்கு இரண்டரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். பால் உற்பத்திக்கும் மலச்சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை தவிர்க்கவும் அவர்கள் 2.5 லிட்டரில் இருந்து 3.5 லிட்டர் வரைக்கும் தண்ணீர் குறையாமல் குடிக்க வேண்டும்.
சில நேரங்களில் நமக்கு ஏன் தலை வலிக்கிறது என்பது தெரியாமல் கடுமையான தலைவலி ஏற்படும். அதற்கு காரணம் உடலில் தண்ணீர் தேவையான அளவு இல்லாமல் இருப்பது தான். மேலும் கை, கால்கள் வறண்டு போவது உடலில் தண்ணீர் குறைவாக இருப்பதற்கான அறிகுறி.
சிறுநீர் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்குள் கழித்து விட வேண்டும் இல்லை எனில் உடலில் நீர் சத்து குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். மேலே கூறிய அறிகுறிகள் இருந்தால் தண்ணீர் அதிகமாக குடித்து அல்லது நீர் சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டு உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்வது அவசியம்.
இதையும் படிங்க: பித்தத்தை அலட்சிய படுத்தினால் அவ்வளவு தான்.. உடனே குறைய இதோ டிப்ஸ்.!