பித்தத்தை அலட்சிய படுத்தினால் அவ்வளவு தான்.. உடனே குறைய இதோ டிப்ஸ்.!

உடலில் உள்ள கல்லீரலில் மஞ்சள் நிறத்தில் சுரக்கின்ற திரவம் தான் பித்தம் எனப்படுகிறது. பித்தமானது உடலில் உள்ள கொழுப்பை ஜீரணிக்க உதவும் ஒரு திரவமாகும். ஆனால், பித்த நீர் உடலில் சமநிலையில் இருப்பது அவசியம். அவ்வாறு இல்லாமல் பித்த நீர் அதிகரித்தால் உடலில் சில மாற்றங்கள் ஏற்படும்.
பித்த நீர் அதிகரித்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் :
உடலில் பித்த நீர் அதிகரித்தால் வாயு பிரச்சனை, அஜீரண கோளாறுகள், வாந்தி, குமட்டல் நெஞ்செரிச்சல், அதிகமாக வியர்வை சுரப்பது, மலச்சிக்கல் பாத வெடிப்பு, கண் எரிச்சல், பசியின்மை ஆகிய பிரச்சினைகள் ஏற்படும்.
இதையும் படிங்க: தினமும் பழங்கள் சாப்பிடுபவர்களா நீங்கள்? இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்..!
பித்த நீர் ஏன் அதிகரிக்கிறது?
நாம் தினமும் குடிக்கும் டீ, காபி பித்தத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் டீ, காபி அதிகமாக குடிப்பதால் பித்த நீர் அதிகரிக்கிறது.
மேலும், உடலில் நீர் சத்து இல்லாவிட்டால் அதாவது தினமும் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் பித்தம் அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது.
அதுமட்டுமல்லாமல் மது அருந்துதல், புகைபிடித்தல் போன்ற தீய பழக்கங்களால் பித்தம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும், அதிக காரம் மற்றும் புளிப்பு வகை உணவுகள் இறைச்சி உணவுகள் அதிகமாக எடுத்துக் கொண்டால் பித்தம் அதிகரிக்கும்.
ஆகையால், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அளிக்கின்ற பழங்கள், காய்கறிகள், கீரை வகைகள் ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் பித்தம் குறைய வாய்ப்பு உள்ளது. மேலும், இரவு நேரங்களில் அதிக நேரம் கண் விழிக்காமல் தூங்குவது மிகவும் அவசியம்.
இதையும் படிங்க: தினமும் பழங்கள் சாப்பிடுபவர்களா நீங்கள்? இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்..!