"சிக்கன் ரோஸ்ட் சாப்பிட ஆசைப்பட்டு, நான் ரோஸ் ஆகிவிட்டேன்" - மகனின் விளையாட்டுத்தனமாக பதிவு..! கோபத்தின் உச்சக்கட்டத்தில் தந்தை..! 

"சிக்கன் ரோஸ்ட் சாப்பிட ஆசைப்பட்டு, நான் ரோஸ் ஆகிவிட்டேன்" - மகனின் விளையாட்டுத்தனமாக பதிவு..! கோபத்தின் உச்சக்கட்டத்தில் தந்தை..! 



dad and son conversation about online food delivery

தந்தை தனது மகனை சிக்கன் ரோஸ்ட் விவகாரத்தால், குடும்ப வாட்சட் குழுவிலிருந்து நீக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஆன்லைன் டெலிவரி என்பது எப்போதும் கொஞ்சம் நமது பொறுமையை சோதிக்கும் அளவில்தான் இருக்கும். ஏனெனில் நாம் ஒன்றை ஆர்டர் செய்தால், அவர்கள் ஒன்றை கையில் கொடுத்து நம்மை அசரவைப்பார்கள். இந்த நிலையில் தந்தை மகனிடையே நடந்த உரையாடல் தொடர்பான வாட்ஸ் அப் சேட்டிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

அந்த தகவலில் மகன் தனது தந்தைக்கு ரோஸ்டட் சிக்கன் ஆர்டர் செய்த நிலையில், அதனை தவறான முகவரிக்கு அனுப்பியுள்ளார். பின்னர் சுதாரித்து அந்த சாப்பாடை கேன்சல் செய்துவிட்டு விஷயத்தை உணவருடமும் தெரிவித்து ரீபண்டும் பெற்றுள்ளார். இந்த தகவலை குடும்பத்தினரிடம் தெரியப்படுத்த அம்மா, அப்பா உள்ள குழுவில் தகவலை பகிர்ந்துள்ளார். 

இந்த தகவலை கண்ட தந்தையோ பணம் எனக்கு இன்னும் வரவில்லை என்று விசிட்டடிக்க, அம்மா அனைத்தையும் புரிந்து கொண்டு சிரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தந்தை, மகனை அக்குழுவில் இருந்து நீக்கியுள்ளார். இதனை மகன் விளையாட்டுத்தனமாக "சிக்கன் ரோஸ்ட் சாப்பிட ஆசைப்பட்டு, நான் ரோஸ் ஆகிவிட்டேன்" என்று தலைப்பில் இணையத்தில் பகிர்ந்துள்ளார். அது தற்போது வைரலாகி உள்ளது.