கல்லூரியில் விளையாட்டுப் போட்டியில் நடந்த சோகம்! மைதானத்தில் மாணவர் திடீர் மரணம்

college student dead while playing tug of war in sports day


college student dead while playing tug of war in sports day

மும்பையில் உள்ள சோமையா செவிலியர் கல்லூரியில் நடந்த விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்ட கல்லூரி மாணவர் பாதியிலேயே திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

கேரளாவை சேர்ந்த 19 வயதான என்ற ஜிபின் சன்னி என்ற மாணவர் தானே பகுதியில் தங்கி சோமையா செவிலியர் கல்லூரியில் பயின்று வந்தார். நேற்று கல்லூரியில் விளையாட்டு போட்டி நடைபெற்றது. கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் தங்களது திறமைகளை நிரூபித்து கொண்டிருந்தனர். எல்லா போட்டிகளும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தன.

ஜிபின் tug-of-war எனப்படும் கயிறு இழுக்கும் போட்டியில் கலந்துகொண்டார். அந்த போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே ஜிபின்  திடீரென கீழே மயங்கி விழுந்தார். அதனை கண்ட கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அவரை உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

sports day

இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இதனைப்பற்றி சக மாணவர்களிடம் விசாரிக்கும் பொழுது, ஜிபின் நல்ல உடல் தகுதியுடன் தான் இருந்ததாகவும், அவருக்கு எந்தவித குறைபாடும் இருந்ததாக தெரியவில்லை என்றும் தெரிவித்தனர். ஜிபினின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது இதயம் மிகவும் அகன்று இருப்பதாகவும், அவரது மூளையில் சிறிய அளவு காயம் இருப்பதாகவும் கண்டறிந்துள்ளனர். இதுவே அவரது மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இந்த செய்தியை கேட்டு மருத்துவமனைக்கு விரைந்து வந்த ஜிபினின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் அவரது உடலை அடக்கம் செய்ய கேரளாவில் உள்ள சொந்த கிராமத்திற்கு எடுத்து செல்ல போவதாக கூறியுள்ளனர். வெளிநாட்டில் இருக்கும் அவரது உறவினர்கள் வந்தவுடன் உடல் அடக்கம் செய்யப்படும் என்றும் கூறியுள்ளனர்.

மேலும் ஜிபினை பற்றி அவரது நண்பர்கள் கூறுகையில் "நாங்கள் ஞாயிற்றுக்கிழமை ஆலயத்திற்கு வரும்பொழுது ஜிபினை சந்திப்பது உண்டு. அவர் எல்லோரிடமும் சகஜமாக பழகக் கூடியவர். இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒன்று சேர்ந்து கொண்டாட நாங்கள் அனைவரும் முடிவு செய்திருந்தோம். எங்கள் குழுவிற்கு அவர் தான் முக்கியமானவர். அவரது மரணம் எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. எங்களால் இதை நம்பவே முடியவில்லை" என அழுதபடியே கூறுகின்றனர்.