ஆரோக்கியத்துடன் அழகிலும் மிளிர கேரட்: தினமும் சாப்பிட்டால் என்ன நன்மைகள்?,.. தெரிஞ்சுக்கலாம் வாங்க..!

ஆரோக்கியத்துடன் அழகிலும் மிளிர கேரட்: தினமும் சாப்பிட்டால் என்ன நன்மைகள்?,.. தெரிஞ்சுக்கலாம் வாங்க..!



Carrots in our diet every day to be beautiful and light with health

ஆரோக்கியத்துடன் அழகாகவும் ஒளிர தினமும் நம் உணவில் கேரட் சேர்த்துக் கொள்வது அவசியம்.

காய்கறிளில் கேரட் இனிப்பு சுவையுடன் இருப்பதால் குழந்தைகள் இதை பச்சையாகவே விரும்பி சாப்பிடுவர். இதில் சத்துக்கள் நிறைந்துள்ளதால் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

கேரட் அதன் சுவைக்கு ஏற்ப ஆரோக்கியத்திலும் சளைத்ததல்ல. கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது, கண் பார்வையை கூர்மையாக்குகிறது, உடலின் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது, எலும்புகளை உறுதியாக்குதல் போன்ற பல நன்மைகள் கேரட்டில் உள்ளது.

அதில் உள்ள இனிப்புச் சுவை சர்க்கரை நோய் கொண்டவர்களுக்கு நல்லது. சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.  இதில் உள்ள நார்ச்சத்து நன்மை அளிக்கக்கூடிய கிருமிகளை உருவாக்குகிறது.

கேரட் இரத்தத்தில் இருக்கும் கொழுப்பைக் குறைக்க உதவும். கேரட்டை அதிகமாக சாப்பிட்டால் இரத்தக் கொழுப்பு குறையும்.
கேரட்டில் இருக்கும் வைட்டமின் A கண்களின் பார்வையைத் தெளிவாக்கி ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்.

உடல் எடையைக் குறைக்க தினமும் காலை உணவாக பச்சையாக கேரட்டை சாப்பிட்டு வரலாம்.

புற்றுநோய் உருவாவதை ஆரம்பத்திலேயே அழிக்கும் வல்லமை கேரட்டில் இருப்பதால் தினமும் எடுத்துக்கொள்ளுதல் நல்லது.
உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல. உடல் அழகைப் பராமரிக்கவும் கேரட் உதவும். தினமும் கேரட் ஜூஸ் குடித்து வந்தால் முகம் பளபளப்பாகும்.