உங்கள் வீட்டில் கத்தரிக்காய் உள்ளதா..? 10 நிமிடத்தில் சுவையான கத்தரிக்காய் சட்னி செய்வது எப்படி...

உங்கள் வீட்டில் கத்தரிக்காய் உள்ளதா..? 10 நிமிடத்தில் சுவையான கத்தரிக்காய் சட்னி செய்வது எப்படி...



Brinjal chutney recipe

இட்லி, தோசைக்கு மிகவும் அட்டகாசமாக இருக்கும் சுவையான கத்தரிக்காய் சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
பெரிய கத்திரிக்காய் - 1
புளி - சிறிய அளவு
உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 3
பூண்டு - 4 பல்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

தாளிப்புக்கு:
நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது

Brinjal chutney

முதலில் கத்தரிக்காய் மற்றும் பூண்டை பொடி பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும். பிறகு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் அதில் பூண்டு, வரமிளகாய்,உளுத்தம் பருப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கி ஆறவிடவும்.

பின்னர் அதே வாணலியில் கத்திரிக்காய் சேர்த்து, சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி, புளியை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.அனைத்து பொருட்களும் ஆறியதும் ஒரு மிக்சி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.

பின்னர் தளிப்பிற்கு அடுப்பில் வாணலியை வைத்து  எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் அதில் கடுகு,உளுத்தம் பருப்பு,கறிவேப்பிலை மற்றும் பெருங்காய தூள் சேர்த்து தாளித்து பின் அரைத்த சட்னியையும் சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான கத்திரிக்காய் சட்னி தயார்