லைப் ஸ்டைல் சமூகம்

பெண்ணை கொலை செய்து, உடலை பலாத்காரம் செய்த கொடூர இளைஞர்! விசாரணையில் திடுக்கிடும் தகவல்

Summary:

boy murdered and raped a girl in bengaluru

பெங்களூரில் பேருந்துக்காக காத்திருந்த இளம்பெண்ணை சக ஊழியர் ஒருவர் வீட்டில் விட்டுவிடுவதாக ஏமாற்றி பைக்கில் ஏற்றிசென்று கொலை செய்து பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், தாவணகெரே  மாவட்டத்தில் இயங்கி வரும் ஒரு   தனியார் ஆயத்த ஆடை தொழிற்சாலையில் பக்கத்து ஊரை சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவர் வேலை பார்த்துவந்துள்ளார். இவர் தினமும் பேருந்தில் தான் வேலைக்கு சென்று வந்துள்ளார். 

சில நாட்களுக்கு முன், அந்த பெண் வேலை முடிந்து வீட்டிற்கு செல்ல தொழிற்சாலை அருகேயுள்ள பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார். நீண்ட நேரமாகியும் பேருந்து வரவில்லை. அப்போது, அதே நிறுவனத்தில் பணிபுரியும் அவருக்கு தெரிந்த வாலிபர் ஒருவர் பைக்கில் வந்துள்ளார். அந்த பெண் பேருந்துக்காக காத்திருப்பதை பார்த்த அவர் பைக்கை நிறுத்திவிட்டு அந்த பெண்ணிடம், ‘உனக்கு தொந்தரவு  இல்லை என்றால், பைக்கில் நானே உன் வீட்டில் விட்டுவிடுகிறேன்’ என்று கூறியுள்ளார். 

girl waiting for bus at night க்கான பட முடிவு

நீண்ட நேரமாகயும் பேருந்து வராததால், வாலிபர் பைக்கில்  செல்ல அந்த பெண் முடிவு செய்து பைக்கில் ஏறி சென்றுள்ளார். சிறிது  தூரம் சென்றதும் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் பைக் திடீரென நின்றது. அதிர்ச்சி அடைந்த அந்த பெண், ‘என்ன ஆச்சு?’ என கேட்க, அதற்கு வாலிபர் பைக்கை சோதனை செய்வது போல் சிறிது நேரம் நடித்து விட்டு, ‘பெட்ரோல் தீர்ந்து விட்டது’ என்று கூறியுள்ளார். மேலும், ‘சிறிது தூரத்தில் பெட்ரோல் பங்க் உள்ளது. நாம் இருவரும் நடந்து சென்று பெட்ரோல் வாங்கி வருவோம்’ என்றும் கூறியுள்ளார்.  

அதை நம்பிய அந்த பெண், அவருடன் நடந்து சென்றார். அப்போது, வாலிபர் சாலை வழியாக செல்லாமல் குறுக்கு வழி என கூறி காட்டுப் வழியாக அழைத்துச் சென்றார். ஆள் நடமாட்டம் இல்லாத அந்த காட்டு பகுதியை பார்த்ததும் அந்த பெண்ணுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. ஏதோ தவறு நடக்க போகிறது என்பதை உணர்ந்த அவர், ‘திரும்பி சென்று விடலாம்’  என்று கூறினார். ஆனால், ‘இன்னும்  சிறிது தூரம்தான்’ என்று கூறி அவரை வலுக்கட்டாயமாக அழைத்துள்ளார் வாலிபர். 

boy and girl at forest க்கான பட முடிவு

ஆனால் அந்த பெண் அவருடன் செல்ல மறுக்கவே, வாலிபர் தனது  சுயரூபத்தை காட்டத் தொடங்கினார். அந்த பெண்ணை கட்டிபிடித்து பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அந்த பெண் அவரை தடுக்க முயற்சி செய்யவே, இதனால் ஆத்திரமடைந்த வாலிபர், அந்த பெண் அணிந்திருந்த துப்பட்டாவால் அவருடைய கழுத்தை  நெரித்து கொலை செய்துள்ளார். 

பின்னர், அந்த பெண்ணின் ஆடைகளை கலைந்த வாலிபர் சடலத்தை கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளார். ஆசை தீர்ந்ததும்,  சடலத்தை போட்டு விட்டு பைக்கில் தப்பி விட்டார். நள்ளிரவு ஆகியும் மகள் வீடு திரும்பாததால் கவலை அடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடியும் பெண் கிடைக்காததால் தாவணகெரே போலீசில் புகார் அளித்தனர். 

போலீசார் விசாரணையில், அந்த பெண்ணை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில், அந்த பெண் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் இருந்து வீசிய துர்நாற்றம் மற்றும் அதிகளவில் பறந்த பறவைகளால் சந்தேகம் அடைந்த சிலர், துர்நாற்றம் வீசிய இடத்துக்கு சென்று  பார்த்தனர். அங்கு நிர்வாண நிலையில் அழுகிய இளம்பெண் சடலம் கிடந்தது.  

தொடர்புடைய படம்

இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததும், அங்கு சென்று சடலத்தை  கைப்பற்றினர். விசாரணையில், சடலமாக கிடந்தவர் காணாமல் போன அந்த பெண் தான் என்பது உறுதியானது. பிரேத பரிசோதனையில், அந்த பெண் கொலை செய்யப்பட்ட பிறகு பலாத்காரம் செய்யப்பட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

கொலையாளியை போலீசார் தேடியும், துப்பு கிடைக்கவில்லை. அந்த பெண் வேலை பார்த்து வந்த ஆயத்த ஆடை நிறுவனத்திலும், அக்கபக்கம் உள்ள கடைகளிலும் விசாரித்தபோது ரங்கசாமி என்ற வாலிபர் அந்த பெண்ணை அடிக்கடி தூரத்தில் இருந்து கண்காணித்தது தெரிய வந்தது. இதையடுத்து,  தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் ரங்கசாமியை கைது செய்தனர்.  அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில்தான், மேற்கண்ட சம்பவங்கள் அனைத்தும் தெரிய வந்தது. போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி,  காவலில் எடுத்துள்ளனர். 


Advertisement