எப்போதும் புளூடூத் ஹெட்செட்டுடன் திரிபரவா நீங்கள்... விரைவில் பேராபத்து..!



Bluetooth Headset Is Dangerous 

 

உலக காது கேட்கும் நாள் இன்று தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மருத்துவமனையில் சிறப்பிக்கப்பட்டது. பல மருத்துவமனைகளில் மருத்துவர்களால் அறிவுறுத்தல் மற்றும் செவி சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 

இந்நிலையில், இளம் தலைமுறைக்கு அறிவுரை கூறும் வகையில் பேசிய தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி செவித்திறன் சிறப்பு மருத்துவர், "இளைய சமுதாயத்தினர் தங்களின் செவி ஒலித்திறனை முறையாக பராமரிக்க வேண்டும். 

பலரும் இன்றளவில் ஹெட்செட், புளூடூத் போன்றவற்றை பயன்படுத்தி வருகிறார்கள். இதனை எப்போதாவது பயன்படுத்துவதில் தவறு இல்லை. ஆனால், அதனை எப்போதும் பயன்படுவது கட்டாயம் விரைந்து செவித்திறனை பாதிக்கும்" என்று கூறினார்.