மாரடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் கசகசா.? எப்படி பயன்படுத்தலாம்.!?

மாரடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் கசகசா.? எப்படி பயன்படுத்தலாம்.!?



Benefits of eating poppy seeds daily

பொதுவாக இந்திய சமையல் முறையில் பயன்படுத்தப்பட்டு வரும், கசகசா மிகவும் ஆரோக்கியமான மருத்துவ குண நலன்களைக் கொண்டது. இது நம் உடலில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்களை அதிகப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. இதில் மெக்னீசியம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், வைட்டமின் ஈ, வைட்டமின் சி, வைட்டமின் பி6 போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

Healthy

கசகசா அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளும் போது நோய்கள் குணமடைகின்றன என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். எனவே கசகசா சாப்பிடுவதால் என்னென்ன நோய்கள் குணமாகும் என்பதையும், எப்படி சாப்பிடலாம் என்பதையும் குறித்து இப்பதிவில் தெளிவாக பார்க்கலாம்?

1. மூளைக்குச் செல்லும் நரம்பில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி ரத்த செல்களின் வேகத்தை சீராக்குகிறது. இதனால் நினைவாற்றல் குறைவாக இருப்பவர்கள் கசகசாவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
2. குறிப்பாக குழந்தைகளுக்கு கசகசா பாலில் கலந்து தரும் போது அவர்களின் நினைவாற்றல் அதிகரித்து மூளை வளர்ச்சியை மேம்படுத்துகிறது.
3. ஆண்களுக்கு நரம்பு தளர்ச்சி, ஆண்மை குறைபாடு போன்ற  பிரச்சனையை சரி செய்கிறது.
4. இதில் உள்ள கால்சியம் மற்றும் தாமிர சத்து எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
5. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படும் மூட்டு வலி, முதுகு வலி போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது.
6. இதய நரம்புகளில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி நன்றாக செயல்பட வைக்கிறது.
7. தூக்கமின்மை, மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் கசகசாவை தினமும் இரவில் பாலில் கலந்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Healthy

8. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி உடலில் நோய் கிருமிகள் தாக்காமல் பாதுகாக்கிறது. இவ்வாறு பல்வேறு நன்மைகள் உடைய கசகசாவை தினமும் காலை அல்லது இரவில் பாலில் கலந்து குடித்து வந்தால் மிகவும் நல்லது.