முதுகு வலி, மூட்டு வலியை விரட்டி அடிக்கும் ராகி பால்.! எப்படி செய்யலாம்.!?Benefits of drinking healthy milk

ஊட்டசத்தான உணவுகள்

பொதுவாக தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல வகையான நோய் பாதிப்பினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு முக்கிய காரணமாக ஊட்டச்சத்து இல்லாத உணவு பழக்கங்களை பின்பற்றுவது ஆகும். நாம் உண்ணும் உணவில் போதுமான அளவு ஊட்டச்சத்து இருந்தால் மட்டுமே முதுமை பருவத்திலும் நம்மால் இளமையாக இருக்க முடியும்.

ராகி பால்

எலும்புகளின் ஆரோக்கியம்

இதில் குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என பலருக்கும் எலும்பின் ஆரோக்கியம் குறைந்து முதுகு வலி, மூட்டு வலி, கை, கால் வலி போன்ற வலிகள் ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் போதுமான அளவு கால்சியம் மற்றும் இரும்பு சத்து போன்ற ஊட்டச்சத்துகள்  எலும்புகளுக்கு கிடைக்காமல் இருப்பதே. இந்த கால்சியம் மற்றும் இரும்பு சத்து நம் முன்னோர்களின் உணவான ராகியில் அதிகமாக உள்ளது.

இதையும் படிங்க: தினமும் ஒரு வேக வைத்த முட்டை சாப்பிட்டு பாருங்க.? உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா.!?

கேழ்வரகு பாலின் நன்மைகள்

நம் முன்னோர்கள் அந்த காலத்தில் பெரும்பாலும் கேழ்வரகு என்று அழைக்கப்படும் ராகியை உணவாக எடுத்துக் கொண்டனர். இதை களியாகவோ, கூழாகவோ அல்லது இதில் பால் செய்து குடித்து வந்ததால் முதுமையிலும் இளமையாக நோய் நொடியில்லாமல் வாழந்து வந்தனர். இந்த கேழ்வரகில் எவ்வாறு பால் செய்யலாம் என்பதை குறித்து பார்க்கலாம்.

ராகி பால்ராகி பால்ராகி பால்

கேழ்வரகு

பால் செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு எடுத்துக்கொண்டு 8 மணி நேரத்திற்கு நன்றாக ஊற வைத்துக் கொள்ளவும். பின்னர் மிக்ஸி ஜாரில் ஊற வைத்த கேழ்வரகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து தனியாக வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த வடிகட்டிய கேழ்வரகு கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கட்டி சேராமல் கிளறி விடவும். குறிப்பிட்ட பதத்திற்கு தண்ணீர் வற்றி வரும்போது ஒரு டம்ளர் அளவிற்கு பால் அல்லது தேங்காய் பால் ஊற்றி நன்றாக கிளறி இறக்கினால் சுவையான கேழ்வரகு பால் தயார். தேவைப்பட்டால் இதில் கருப்பட்டி கலந்த பால் சேர்த்து கிளறி கொள்ளலாம்.

இதையும் படிங்க: ஒரே வாரத்தில் உடல் எடை குறைய வேண்டுமா.? இந்த ஒரு பழம் போதும்.? ட்ரை பண்ணி பாருங்க.!?