உலகம் லைப் ஸ்டைல்

வைரல் வீடியோ: இப்படி ஒரு சிறந்த முடி வெட்டும் தொழிலாளியா.? 50 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்த வீடியோ காட்சி.!

Summary:

Barber search for perfection while cutting hair makes for hilarious video

இப்படி ஒரு சிறந்த சவரத் தொழிலாளியா? என வியக்க வைக்கும் வகையில் நபர் ஒருவர் செய்துள்ள காரியம் வீடியோவாக வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

பொதுவாக முடிவெட்ட செல்ல வேண்டும் என்றாலே சிலர் மனதில் பொதுவாக சில சந்தேகம் எழும். முடி வெட்டுபவர் சரியாக வெட்டுவாரா? அவர் வெட்டும் ஸ்டைல் நமக்கு ஏற்ற வகையில் இருக்குமா? இப்படி ஏகப்பட்ட சந்தேகங்கள் சிலர் மனதில் எழுவது உண்டு.

இந்நிலையில் நபர் ஒருவருக்கு முடி வெட்டிய பிறகு, தான் சரியாக வெட்டி உள்ளேனா? வெட்டிய அளவு சரியாக உள்ளதா? எங்கையாவது பிசுறு உள்ளதா? என பார்ப்பதற்காக முடி வெட்டும் அந்த நபர் பல கோணங்களில் நின்று முடிவெட்டிக் கொண்டவரை உற்றுநோக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பார்ப்போரை சிரிக்க வைக்கும் விதமாக உள்ளது.

ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் வைராகிவரும் இந்த வீடியோ காட்சியை 48 லட்சத்துக்கும் அதிகமானோர் ட்விட்டர் தளத்திலும், 36 லட்சத்துக்கும் அதிகமானோர் பேஸ்புக் தளத்திலும் பார்த்து ரசித்துள்ளனர். இதோ அந்த காட்சி. நீங்களும் பார்த்து ரசியுங்கள்.


Advertisement