நகம் கடிப்பதால் இவ்வளவு ஆபத்தா.? விளையாட்டு வினையாகும் உஷார்.!bad habit of nail biting

நகம் கடிக்கும் பழக்கம் கொண்டிருப்பவர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

தொற்று ஏற்பட வாய்ப்பு :
நகத்தில் வைரஸ் கிருமிகளின் தாக்கம் அதிகம் இருப்பதால் அதில் வாயை வைத்து கடிக்கும் போது, இது நமக்கு தொற்றுநோயை ஏற்படுத்தக்கூடும். மேலும், நக வளர்ச்சி குறையவும் அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கின்றன. 

nail bite
ஆரோக்கியமற்ற நகம் & கைகள் :
இவ்வாறு கடிக்கும் போது நகத்தை சுற்றி வலி மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். விரலின் தசை பகுதியில் இருந்து நகம் விலகி காயம் ஏற்படும். அத்துடன் அந்த தசை பகுதியில் ரத்தக்கசிவு ஏற்படும். நகங்கள் நிறம் இல்லாமல் ஆரோக்கியமற்று தோற்றமளிக்கும். 

இதையும் படிங்க: நுரையீரலில் தேங்கியிருக்கும் சளி கரைந்து மலம் வழியாக வெளியேற இதை ட்ரை பண்ணி பாருங்க.!?

nail bite
பாதிப்பு குடும்பத்திற்கும் உண்டு :
விரல்களில் தொற்று ஏற்படுவதால் நாம் சாப்பிடும் போது அல்லது சமைக்கும்போது அதில் அந்த பூஞ்சை தொற்று தொடரலாம். இது வயிற்று வலி, வயிறு உபாதைகள் உள்ளிட்ட பிரச்சனைகளை உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் ஏற்படலாம் ஏற்படுத்தும். எனவே, நகம் படிக்கும் பழக்கம் இருந்தால் அதை இன்றோடு கை விட்டு விடுங்கள். அதுதான் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நல்லது.

இதையும் படிங்க: அடிக்கடி நகம் கடிக்கிறீர்களா.? இது உங்களுக்கு தான்.! கொஞ்சம் உஷாரா இருங்க.!