உலகம் லைப் ஸ்டைல்

வைரல் வீடியோ: பிறந்து 8 வாரங்களில் பேசும் குழந்தை..! பார்ப்போரை பிரமிக்கவைக்கும் வைரல் வீடியோ காட்சி.!

Summary:

Baby says helo after 2 weeks of born viral video

பிறந்து 8 வாரங்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று தனது தந்தையை பார்த்து ஹலோ என்று கூறும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

பொதுவாக பிறந்த குழந்தைகள் பேசுவதற்கு பல மாதங்கள் எடுத்துக் கொள்ளும். அதிலும் ஒருவர் கூறுவதை அப்படியே கேட்டு திருப்பி கூறுவதற்கு 10 முதல் 14 மாதங்கள் வரை ஆகலாம்.

ஆனால் இங்கிலாந்தைச் சேர்ந்த Nick , 36 மற்றும்  Caroline, 37 என்ற தம்பதிக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பிறந்த குழந்தை ஒன்று தனது தந்தை கூறும் வார்த்தையை கேட்டு அப்படியே திருப்பி கூறுகிறது. 

(Picture: SWNS)

நிக் தனது குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு தனது குழந்தை இந்த உலகுக்கு வரவேற்கும் விதமாக குழந்தையை பார்த்து ஹலோ என்று கூறுகிறார். தந்தை கூறுவதை கேட்டு குழந்தையும் மீண்டும் ஹலோ என திருப்பி கூறுகிறது. பிறந்து 2 மாதத்துக்குள் தந்தை கூறும் வார்த்தையை கேட்டு அப்படியே திருப்பி கூறும் குழந்தையின் இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Video Link : https://metro.co.uk/video/parents-film-eight-week-old-baby-saying-hello-2237080/?ito=vjs-link


Advertisement