அன்று நடந்ததுதான் என்ன..? மனம்திறந்த அபிராமியின் கணவர்..!

அன்று நடந்ததுதான் என்ன..? மனம்திறந்த அபிராமியின் கணவர்..!


abirami husband vijay talks about the incident

சென்னை குன்றத்தூரில் கள்ளக்காதலனுடன் வாழ்வதற்காக அபிராமி என்ற பெண் தனது குழந்தைகளை விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தனது இரு குழந்தைகளை கொன்று கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் அபிராமி. பிரியாணி கடையில் வேலை செய்யும் சுந்தரத்துடன் ஏற்பட்ட கள்ளக் காதலால் தனது கணவர் மற்றும் இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை முயற்சி செய்தார். அதில் கணவர் தப்பித்து விட்டார். இரு குழந்தைகள் இறந்து விட்டது.

இதனையடுத்து போலீஸார் அபிராமி, சுந்தரம் ஆகிய இருவரையும் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் அன்று நடந்த சம்பவம் பற்றி அபிராமியின் கணவர் விஜய் என்ன விளக்கம் அளித்து உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

abirami husband vijay

அதில் அவர் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாலுக்கா ஆடூர் அகரத்தை சேர்ந்த தான் சென்னை தி நகரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும், மூன்றாம் கட்டளை அக்னீஸ்வரர் கோவில் தெருவில் கடந்த ஐந்து ஆண்டுகளாக குடும்பத்துடன் வாடகைக்கு குடியிருந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

கடந்த 2011ம் ஆண்டு குன்றத்தூர் அருகே கோவூரை சேர்ந்த அபிராமிக்கும் விஜய்க்கும் குடும்பத்தாரின் ஏற்பாட்டில் திருமணம் நடந்துள்ளது.  அவர்களுக்கு 6 வயதில் அஜய் என்ற மகனும் 4 வயதில் கார்னிகா என்ற மகளும் இருந்தனர். மகன் அஜய் தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்தார். மகள் வீட்டில் மனைவி அபிராமியுடன் தங்கியிருந்தார். 

abirami husband vijay

நான் தினமும் வழக்கமாக 11 மணிக்கு வேலைக்கு செல்வேன். ஆனால் அன்று மதியம் ஒரு மணிக்குத் தான் வேலைக்கு கிளம்பினேன். அந்த சமயத்திலும் மனைவி சமையல் செய்யவில்லை. ஏன் என்று கேட்டதற்கு மகள் எழுந்தவுடன் அம்மா வீட்டிற்கு செல்லப் போவதாக கூறினாள். பின்னர் நான் வழியில் சாப்பிட்டுவிட்டு அலுவலகத்திற்கு சென்று விட்டேன். எனக்கு அதற்கு முதல் நாள் பிறந்த நாள் என்பதால் எனது மாமியார் வேலையை முடித்து விட்டு என்னை அவர்களது வீட்டிற்கு வரச் சொல்லி இருந்தார்.

நான் வேலை முடிந்தவுடன் அதிகாலை 4 மணிக்கு எனது வீட்டுக்கு வரும் வழியில் மனைவி அபிராமிக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டேன். ஆனால் போன் போக வில்லை. உடனே அங்கிருந்து மாமனார் வீட்டுக்கு சென்றேன். அங்கேயும் எனது மனைவியும் பிள்ளைகளும் இல்லாததால் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஏனெனில் ஏற்கெனவே ஒருமுறை எனது மனைவி அபிராமி என்னுடன் கோபித்துக்கொண்டு குன்றத்தூரில் உள்ள சுந்தரம் என்பவர் வீட்டுக்குச் சென்று இரவு தங்கி இருந்தார் அதனை அறிந்த நாங்கள் அங்கு சென்று அவரை அழைத்தபோது வீட்டிற்கு வர மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தாள். பின்னர் எனது மச்சான் மாமனார் மற்றும் உறவினர்கள் சமாதானம் பேசி என் மனைவியை என்னுடன் அனுப்பி வைத்தார்கள்.

abirami husband vijay

இந்த சமயமும் அதேபோல் சென்றிருப்பாள் என்று சந்தேகம் அடைந்த நான் எனது மச்சான் மணிகண்டனை அழைத்து கொண்டு சுந்தரத்தின் வீட்டிற்கு சென்றேன். ஆனால் அங்கு சுந்தரமும் இல்லை என் மனைவியும் இல்லை. உடனே நானும் மணிகண்டனும் திரும்பி எனது வீட்டுக்கு வந்து பார்த்தோம். 

வீட்டின் கதவு வெளியில் தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. நான் கதவைத் திறந்து பார்த்தபோது எனது மகனும் மகளும் வாயில் நுரை தள்ளி மூச்சு பேச்சு இல்லாமல் இறந்து கிடந்தார்கள். அப்போதும் என் மனைவி வீட்டில் இல்லை. எனது மனைவி அபிராமி சுந்தரம் என்பவருடன் ஏற்பட்ட பழக்கத்தால் அவனுடன் சேர்ந்து வாழ என் குழந்தைகளை இடையூறாக இருப்பதாக எண்ணி எனது மகனையும் மகளையும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டாள். பின்னர் எனது மனைவி சுந்தரத்துடன் தப்பிச் சென்றுவிட்டதாக தெரிந்தது.

இவ்வாறு அவர் அன்று நடந்த சம்பவத்தை பற்றி விளக்கம் அளித்துள்ளார்.