மருத்துவரால் சிறைவைக்கப்பட்டு பலமுறை கற்பழிக்கப்பட்ட சிறுமி; மூடிமறைத்த காவல்துறை!

a minor girl raped by doctor held captive


a minor girl raped by doctor held captive

உத்திரபிரதேசத்தில் மருத்துவமனையில் வேலை தருவதாக சிறுமியை ஏமாற்றி பல நாட்கள் அடைத்து வைத்து பல முறை கற்பழித்த மருத்துவர். பெற்றோரின் புகாரை ஏற்க மறுத்து மருத்துவருக்கு உதவிய காவல்துறையால் பெரும் பரபரப்பு.

உத்திரபிரதேசம் மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருபவர் வினோத் குஷ்வாஹ். அவர் அந்த பகுதியில் உள்ள ஒரு சிறுமியிடம் மருத்துவமனையில் உதவியாளராக பணியில் சேர்த்துக் கொள்வதாக கூறி அழைத்து சென்றுள்ளார். பின்னர் அந்த சிறுமியை ஒரு அறையில் பல நாட்களாக அடைத்து வைத்து பலமுறை கற்பழித்துள்ளார் மருத்துவர்.

UP minor girl rape

சில தினங்களுக்கு பிறகு அங்கிருந்து தப்பி ஓடிய சிறுமி தனக்கு நடந்த கொடுமைகளை பற்றி தன் பெற்றோரிடம் விவரித்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் அந்த பகுதியில் உள்ள  காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் மருத்துவர் பெரிய இடத்தை சேர்ந்தவர் என்பதால் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யாமல் சிறுமிகள் பெற்றோரை மிரட்டியுள்ளனர்.

இதனால் விரக்தி அடைந்த சிறுமியின் பெற்றோர் கூடுதல் கண்காணிப்பு அதிகாரியிடம் (ASP) நேரில் சென்று முறையிட்டுள்ளனர். அதன்பின் மருத்துவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர்.