உலகம் லைப் ஸ்டைல்

உள்ளாடை அணியாமல் வெளியே செல்வது இந்நாட்டு சட்டப்படி குற்றம்.! எந்த நாட்டில் தெரியுமா.?

Summary:

4 Laws you should know about Thailand

உலகின் பல்வேறு நாடுகளில் பலவிதமான சட்டதிட்டங்கள் கடைபிடிக்கப்பட்டுவருகின்றன. அந்தவகையில் தாய்லாந்து நாட்டில் கடைபிடிக்கப்பட்டுவரும் சில சட்டதிட்டங்கள் பற்றித்தான் இந்த பதிவில் பார்க்க உள்ளோம்.

1 . மன்னர் குடும்பத்தை அவமதிப்பது.

தாய்லாந்து சட்டப்படி அந்நாட்டின் மன்னர் அல்லது அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களை பற்றி அவதூறு பேசுவதோ, அவர்களை கலாய்ப்பதோ, அவர்களுக்கு எதிராக நடந்துகொள்வதோ அந்நாட்டு சட்டப்படி குற்றம். இதற்காக 15 வருடங்கள் வரை ஜெயில் தண்டனை வழங்கப்பட வாய்ப்புள்ளது.

2 . சட்டை அணியாமல் வாகனம் ஓட்டுவது.

தாய்லாந்து சட்டப்படி வாகனம் ஓட்டுபவர் சட்டை அணியாமல் வாகனம் ஓட்டுவது அந்நாட்டு சட்டப்படி குற்றம்.

3 . உள்ளாடை அணியாமல் வெளியே செல்வது.

அங்கு கடைபிடிக்கப்படும் வினோதமான சட்டத்தில் இதுவும் ஓன்று. வீட்டில் இருந்து வெளியே செல்லும் நபர்கள் உள்ளாடை அணியாமல் வெளியேறக்கூடாது. உள்ளாடை அணியாமல் வீட்டை விட்டு வெளியேறுவது அந்நாட்டு சட்டப்படி குற்றம்.

4 . பணத்தின் மீது கால் வைப்பது.

அந்நாட்டு பணத்தின் மீது தெரிந்தோ அல்லது தெரியாமலோ காலடி எடுத்து வைப்பது தாய்லாந்து சட்டப்படி பெரும் குற்றம். பணத்தில் இருக்கும் ராஜாவின் உருவத்தின் மீது காலடி படும் என்பதால் இந்த சட்டம் அந்நாட்டில் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.


Advertisement