இந்தியா

திருமணமாகாமலே ஒரே வீட்டில் வாழ்ந்த காதல் ஜோடி! திடீரென காதலியை தீர்த்துக்கட்டிய இளைஞன்! பகீர் சம்பவம்!

Summary:

youngman killed lover in bengalur

பெங்களூரு துமகூரு மாவட்டம் பாவகடாவில் வசித்து வந்தவர் திப்பேசாமி. 26 வயது நிறைந்த இவர் டிரைவராக இருந்தார். இந்நிலையில் கடந்த 8 மாதத்திற்கு முன்பு திப்பேசாமிக்கு தரிக்கெரேயை சேர்ந்த நயனா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் காதலாக மாறியநிலையில்,அவர்கள் கடந்த 4 மாதமாக முனேகொலலா என்ற பகுதியில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து திருமணம் செய்யாமலேயே ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் திப்பேசாமி நயனாவுடன் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார். ஆனால் அவரோ தான் வேறு ஒருவரை காதலிக்கிறேன். அவரைத்தான் திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் தகராறு முற்றியநிலையில், இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். 

இந்நிலையில் திப்பேசாமி, நாயனாவை தோசை டவாவால் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து திப்பேசாமி தனது காதலியை கொலை செய்து விட்டதாக போலீசாரிடம் சரணடைந்தார். அதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திப்பேசாமியை  கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement