இளைஞரின் விபரீத ஆசையால், கண்ணிமைக்கும் நொடியில் நேர்ந்த கோரசம்பவம்! வைரலாகும் வீடியோ!youngman falling from parthasarathi rocks

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் உதவி ஆராய்ச்சியாளராக பிரவீன் திவாரி என்பவர் பணியில் சேர்ந்துள்ளார். 30 வயது நிறைந்த இவர்  ஆராய்ச்சிக்காக பல்கலைகழக வளாகத்தில் உள்ள பார்த்தசாரதி பாறையில் கயிறின்றி ஏறிக்கொண்டிருந்தார். 
 
மேலும் அவர் பாறை மீது ஏறும் போது அவரது நண்பர் அதனை வீடியோ எடுத்துள்ளார். 

அவ்வாறு அந்த இளைஞர் பாறையின் மீது கால் வைத்து மேலே ஏறிக்கொண்டிருந்தபோது திடீரென மண் பாறை உடைந்தது. இதில் அந்த இளைஞர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். உடன் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது அவர் பாதிவழியிலேயே உயிரிழந்தார். 
 
இந்த கோரசம்பவம் பல்கலைக்கழக மாணவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.