இந்தியா காதல் – உறவுகள்

தன்னைத்தானே சுட்டு தற்கொலைக்கு முயன்ற வாலிபர்! வெளியான அதிரவைக்கும் காரணம்!

Summary:

youngman commit suicide in love issue

டெல்லி திக்ரி குர்த் பகுதியைச் சேர்ந்த விகாஷ் என்ற வாலிபர் துப்பாக்கியால் தன்னை சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதைத் தொடர்ந்து கூறியதாவது, திக்ரி குர்த் பகுதியை சேர்ந்தவர் விகாஸ். 27 வயது நிறைந்த இவரது நண்பர் ரமேஷ். 

ரமேஷ் சிறையில் இருந்துவரும் நிலையில் அவரது மனைவி, சுவரண் ஜெயந்தி விகார் பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விகாசிற்கு ரமேஷின் மனைவி மீது காதல் ஏற்பட்டுள்ளது. மேலும் அவரை விகாஸ் தன்னுடன் வாழ வரும்படி அழைத்து கெஞ்சியுள்ளார். ஆனால்அதற்கு ரமேஷின் மனைவி ஒப்புக்கொள்ளவில்லை.

இந்நிலையில் மனமுடைந்து காணப்பட்ட விகாஸ் துப்பாக்கியால் தன்னைதானே நெஞ்சில் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ரமேஷின் மனைவி உடனே இதுகுறித்து  காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தநிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் விகாஸை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதனைத் தொடர்ந்து போலீசார் விகாஸ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Advertisement