இந்தியா Covid-19

ப்ளீஸ் சார்... ஆக்சிஜனை கொண்டு போகாதீங்க.! என் அம்மா இறந்துடுவாங்க என கெஞ்சி கதறிய மகன்.! ஷாக் வீடியோ.!

Summary:

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை வேகமெடுத்து வருகிறது. அந்த வகையில் உத

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை வேகமெடுத்து வருகிறது. அந்த வகையில் உத்தரபிரதேசத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதனால், அம்மாநிலத்தில் உள்ள பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதாக தவகல்கள் வந்துகொண்டு உள்ளது.

இந்நிலையில், அம்மாநிலத்தில் இளைஞர் ஒருவரின் தாயார் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அங்கு உள்ள ஒரு மருத்துவமனையில் அவரது அம்மாவை அனுமதித்துள்ளார். அப்போது அந்த மருத்துவமனையில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டரை வெளியில் எடுத்துச்சென்றுள்ளனர்.

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர், தனது அம்மா உயிரிழந்துவிடுவார்கள். ஆக்சிஜன் சிலிண்டரை தயவு செய்து எடுத்து செல்லாதீர்கள் என்று காவல்துறையினர் முன் காலில் விழுந்தபடி கெஞ்சியுள்ளார். ஆனாலும் ஆக்சிஜன் சிலிண்டரை  எடுத்துச்சென்றதாக கூறப்படுகிறது. இதன் பிறகு அடுத்த இரண்டு மணி நேரத்தில் அந்த இளைஞரின் தாயார் உயிரிழந்துள்ளார். அங்கு நடந்த சம்பவத்தின் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. 


Advertisement