அருந்ததி படத்தை பார்த்துவிட்டு அனுஷ்கா போல மாற நினைத்த இளைஞன்.! பரிதாபமாக போன உயிர்.!



young man fired and death

கர்நாடக மாநிலத்தில் மறுபிறவி எடுப்பதாக நினைத்து தீக்குளித்த இளைஞர் உயிரிழந்த பரிதாப சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் கொண்டவாடி கிராமத்தை சேர்ந்தவர் ரேணுகா பிரசாத். 22 வயது நிரம்பிய இவருக்கு திரைப்படங்கள் பார்ப்பதில் ஆர்வம் அதிகம். அந்த திரைப்படங்களில் வரும் கதாபாத்திரங்கள் போல தன்னை பாவித்து கொள்வது ரேணுகா பிரசாத்துக்கு வழக்கம்.

இந்த நிலையில் சமீபகாலமாக அனுஷ்கா நடிப்பில் வெளியாகி இருந்த அருந்ததி திரைப்படத்தை ரேணுகா பிரசாத் பார்த்து வந்து உள்ளார். அந்த படத்தில் அனுஷ்கா தனது தலையில் தேங்காய்களால் அடித்து உயிரை மாய்த்து கொள்வார். பின்னர் அனுஷ்கா மறுபிறவி எடுத்து வரும் காட்சிகள் இடம் பெற்றிருக்கும்.

இந்த நிலையில் அனுஷ்காவை போல உயிரிழந்து மறுபிறவி எடுத்து விடலாம் என்று கருதிய ரேணுகா பிரசாத் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து உள்ளார். இதனால் பலத்த தீ காயமடைந்து உயிருக்கு போராடிய ரேணுகா பிரசாத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ரேணுகா பிரசாத் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.