இந்தியா

கொரோனா சேவை! முதல் மாத சம்பளத்துடன் தாயை பார்க்க சென்ற இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்!

Summary:

Young male nurse dead in accident at kerala

சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது பல நாடுகளிலும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவில் பரவிய ஆரம்பத்தில் கேரளாவில்தான் அதிகளவில் இருந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த கேரளாவில் மருத்துவர்கள்,  செவிலியர்கள் அனைவரும் இரவு பகல் பாராமல் தீவிர பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் கேரளா திருச்சூர் மாவட்டத்தில் குன்னங்குளம் என்ற பகுதியில் அரசு மருத்துவமனையில் ஆண் செவிலியராக பணியாற்றியவர் ஆசிப். இவர் கடந்த மார்ச் மாதம் மத்தியில்தான் பணியில் சேர்ந்து கொரோனா தனிமைப்படுத்தும் வார்டில் பணியாற்றி வந்துள்ளார். மிகவும் சுறுசுறுப்பாக நோயாளிகளை கவனித்து வந்த அவருக்கு கடந்த மாதம் சேவையாற்றியதற்கான ஊதியம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் தனது முதல் சம்பளத்தை பெற்றுக்கொண்ட ஆசிப் மிகவும் மகிழ்ச்சியுடன் தனது தாயை பார்க்க பைக்கில் சென்றுள்ளார். அப்போது லாரி ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவரது குடும்பத்தினருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளனர்


Advertisement