குடியரசுத் தலைவருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இளம்பெண்கள்!
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 2 சிறுமிகள் குடியரசு தலைவருக்கு தங்களது ரத்தத்தால் கடிம் எழுதியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளம்வயது நிரம்பிய இரண்டு பெண்கள், பஞ்சாப் மாநிலத்தின் மோகா பகுதியில் வசித்து வருகின்றனர். இருவர் மீது இரண்டு தனித்தனியான மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், நாங்கள் ஏமாற்றியதாக 2 பொய்யான வழக்குகள் எங்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. எங்கள் மீது எந்த தவறும் இல்லை. தங்களை முறையாக விசாரிக்குமாறு காவல் துறையை கேட்டுக் கொண்டோம். ஆனால் எங்களை அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

எங்களுக்கு நீதி கிடைக்காவிட்டால் எங்கள் குடும்பத்தினரை கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்' என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், அந்த இரண்டு பெண்களில் ஒருவர் தன்னுடைய உறவினர் ஒருவரை ஜேர்மனிக்கு அனுப்புவதற்காக பணம் வாங்கிவிட்டு, அதில் ரூ.5 லட்சத்தை திரும்ப கொடுக்க மறுத்துள்ளார். அதேபோல மற்றொரு பெண் இருசக்கர வாகனம் வாங்குவதற்காக பணம் வாங்கிவிட்டு அதில் 1.20 லட்சத்தை திரும்ப கொடுக்க மறுத்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக இருவரும் குடியரசு தலைவருக்கு ஒரு கடிதம் அனுப்பியதாக நான் கேள்விப்பட்டோம். ஆனால் இது தொடர்பாக எங்களுக்கு அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. விரைவில் வழக்கு விசாரணையை முடித்து வைப்போம் என கூறியுள்ளார்.