இளம்பெண்ணிற்கு பேய் ஓட்டுவதாக கூறி சாமியார் செய்த செயல்! கதறி துடித்த இளம்பெண்! பதறவைக்கும் வீடியோ!

இளம்பெண்ணிற்கு பேய் ஓட்டுவதாக கூறி சாமியார் செய்த செயல்! கதறி துடித்த இளம்பெண்! பதறவைக்கும் வீடியோ!


young Girl tortured by saint


கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தில் உள்ள மாரிகாம்பா அம்மன் கோவிலில் பூசாரியாக இருக்கும் மல்லிகார்ஜுன் என்பவர், ஒரு பெண்ணுக்கு பேய் ஓட்டுவதாகக்கூறி சரமாரியாக சவுக்கால் அடிக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

இதனையடுத்து இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தற்போதுவரை பேய்கள் என்றாலே அனைவருக்கும் பயம் தான். இதனை ஒரு சிலர் அதை நம்புவார்கள், ஆனாலும் அவை வெறும் மூட நம்பிக்கை என்றும் பலர் கூறிவருகின்றனர்.

இந்நிலையில், பூசாரி மல்லிகார்ஜுன் என்பவர், ஒரு பெண்ணுக்கு பேய் ஓட்டுவதாகக்கூறி சரமாரியாக சவுக்கால் அடிக்கும் வீடியோ காட்சியில் தன்னை அடிக்கவேண்டாம் என அந்த பெண் கதறியும், சாமியார் அவர் தலைமுடியை பிடித்து இழுத்து அடிக்கிறார். 

இந்த வீடியோவை பார்த்தவர்கள் நிஜமாகவே அந்த பெண்ணுக்கு பேய் பிடித்து விட்டதா? அல்லது சாமியார் வேண்டுமென்றே பெண்ணை தாக்குகிறாரா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்தநிலையில் அந்த வீடியோ காட்சி போலீசாரின் பார்வைக்கு சென்றதால் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.