இந்தியா

திகில் சீரியலை பார்த்து அதிர்ச்சியில் தற்கொலை செய்து கொண்ட சிறுமி-வெளியான பரபரப்பு தகவல்!

Summary:

Young girl susai

தற்போது வெள்ளித்திரைக்கு  இணையாக சின்னத்திரையும் வளர்ந்து வருகிறது. பல முன்னணி சானல்களில் சீரியல்களில் தான் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றன.

இவை பெரும்பாலும் தனது சானலின் TRP எகிற வேண்டும் என்பதற்காக போட்டி போட்டு கொண்டு எடுத்து வருகின்றனர். 

இந்நிலையில் டிவி சீரியலை பார்த்து அதிர்ச்சியில் இளம் சிறுமி தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் சட்டார்பூர் பகுதியை சேர்ந்த சிறுமி தன் சகோதரியுடன் சேர்ந்து வீட்டில் திகில் தொடர் பார்த்துள்ளார். அந்த அதிர்ச்சியில் அவர் கழுத்தில் துண்டை மாற்றி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

இதனால் அதிர்ச்சியான சகோதரி அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார். ஆனால் அவர்கள் வந்து காப்பாற்றுவதற்குள் தூக்கு மாட்டிய சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

 போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்து பெற்றோரிடன் ஒப்படைத்துள்ளனர்.

இச்சமயம் அப்பகுதியில் மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது


Advertisement