தந்தையை விட வயது அதிகமானவரை மணந்த 10 வயது சிறுமி! அதிர்ச்சி சம்பவம்!
தந்தையை விட வயது அதிகமானவரை மணந்த 10 வயது சிறுமி! அதிர்ச்சி சம்பவம்!

குஜராத் மாநிலத்தில் 10 வயது சிறுமி ஒருவர் தந்தையால் திருமணத்துக்காக பணத்திற்கு விலை பேசப்பட்டு, அவருக்கு 35 வயதான நபருடன் திருமணம் நடந்த நிகழ்வு தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
குஜராத் மாநிலம் பனஸ்கந்தாவைச் சேர்ந்த பத்து வயது சிறுமியை 35 வயது நிரம்பிய ஆண் ஒருவர் திருமணம் செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் வெளிவந்தநிலையில், அந்த சிறுமி ரூ.50 ஆயிரத்துக்கு அந்த ஆண் நபரிடம் விற்கப்பட்டதாக தெரியவந்தது.
இந்தநிலையில் இதுகுறித்து புகார் வந்ததால் திருமணம் செய்த அந்த ஆண் நபரின் உறவினர் வீட்டில் இருந்து அந்த சிறுமி மீட்கப்பட்டுள்ளார். இதில்; அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், அந்த 10 வயது சிறுமியை திருமணம் செய்தவர், அந்த சிறுமியின் தந்தையைவிட வயதில் மூத்தவர் ஆவார்.
இந்தநிலையில் அந்த சிறுமி மீட்கப்பட்டு, காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அந்த சிறுமிக்கு ஒன்றரை லட்சம் விலை பேசி தரகர் மூலம், விற்பனை ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிறுமியின் தந்தை, அவரது கணவர் மற்றும் தரகர் உள்ளிட்ட மூன்று பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.