இந்தியா

குளியலறையில் கணவனின் தொல்லை! வெளியில் கணவரின் அண்ணன் தொல்லை! நள்ளிரவில் மாமனார் தொல்லை! இளம்பெண்ணின் கண்ணீர் புகார்!

Summary:

young girl complaint on her family members


குஜராத் மாநிலத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணுக்கு நான்கு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்நிலையில் அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். அவர் அளித்த புகாரில், திருமணமான இந்த நான்கு மாதத்தில் நான் பயங்கர கொடுமைகளை அனுபவித்தேன்.

என் கணவர் வீட்டு குளியலறையில் என்னுடன் உல்லாசம் அனுபவிக்க வேண்டும் என கூறியதற்கு நான் மறுப்பு தெரிவித்ததால் அவர் என்னை சரம்வாரியாக அடித்து உதைத்தார். மேலும் நான் தனியாக இருக்கும்போது என் கணவரின் அண்ணன் என்னிடம் பலமுறை தவறாக நடக்க முயற்சி செய்தார்.

அதுமட்டுமல்லாமல்  என் மாமனார், மாமியார் என்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துகிறார்கள். முக்கியமாக நான் நள்ளிரவில் அயர்ந்து தூங்கும் போது என்னை எழுப்பி அடிப்பார்கள். நான் அனைத்துவகையிலும் சிரமப்படுகிறேன். அவர்களின் கொடுமையை என்னால் தாங்கமுடியவில்லை என புகார் அளித்திருந்தார்.

இதனையடுத்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அந்த பெண்ணின் புகார் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


Advertisement