நடுரோட்டில் இளம் பெண் செய்த காரியம்! மிரண்டுபோன தாய்..! சமாதானப்படுத்திய போலீசார்.. பரபரப்பு சம்பவம்young-girl-blackmail-her-mother-to-marry-her-lover

காதலித்த நபரை திருமணம் செய்துகொள்ள தாய் மறுத்ததால் இளம் பெண் ஒருவர் உயரமான விளம்பரப்பலகையின் மீது ஏறி அடம்பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த பெண் ஒருவர் தான் காதலிக்கும் நபரை தனக்கு திருமணம் செய்துவைக்கக்கோரி இந்தூரில் பர்தேசிபுரா நகரில் உள்ள பண்டாரி பாலம் சாலை அருகே இருக்கும் உயரமான விளம்பர பலகையின் மீது ஏறி அடம்பிடித்துள்ளார்.

குறிப்பிட்ட பெண் ஹோட்டல் ஒன்றில் வேலைபார்க்கும் இளைஞர் ஒருவரை காதலிப்பதாகவும், அந்த காதலுக்கு அந்த பெண்ணின் தாய் மறுப்பு தெரிவித்ததோடு அந்த பெண்ணிற்கு வேறொரு நபருடன் திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் அந்த பெண் விளம்பர பலகையின் மீது ஏறி மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டநிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பெண்ணிடம் சமாதானமாக பேசி அவரை கீழே இறங்கவைத்தனர்.