கொலை செய்து சூட்கேசில் அடைக்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்! 5 நாட்களில் போலீசாருக்கு காத்திருந்த பெரும் ஆச்சர்யம்!

கொலை செய்து சூட்கேசில் அடைக்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்! 5 நாட்களில் போலீசாருக்கு காத்திருந்த பெரும் ஆச்சர்யம்!


young-girl-alive-who-wad-wrongly-declared-as-dead

உத்திரப்பிரதேசத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பெண் இரு நாட்களுக்கு பிறகு மீண்டும்  உயிருடன் திரும்பி வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 உத்திரபிரதேசம் காசியாபாத்தில் சில தினங்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவர் உயிரிழந்து  சூட்கேசில் அடைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அப்பெண்ணை குறித்த தகவல்கள்  எதுவும் தெரியாத நிலையில், போலீசார்கள் அப்பெண்ணின் அடையாளங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். 

இந்நிலையில் அதனை கண்ட அலிகரை சேர்ந்த பெண் ஒருவர், அது தனது மகள் வாரிஷா எனவும், அவரது கணவரும், மாமியாரும் கொடுமைப்படுத்தி அவரை  கொன்றுவிட்டதாகவும் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

dead

அதனைத் தொடர்ந்து வாரிஷாவின் கணவர் மற்றும் மாமியார் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட அந்தப் பெண் இரு நாட்களுக்குப் பிறகு மீண்டும் உயிருடன் வந்துள்ளார். அதனை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார்கள் இதுகுறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, கடந்த மாதம் 24ஆம் தேதி தனது கணவர் தன்னை தாக்கியதாகவும், அதனால் கோபித்துக்கொண்டு அனைவரையும் விட்டுவிட்டு நொய்டாவுக்கு சென்று, அங்கு தங்கி கூலிவேலை பார்த்து வந்ததாகவும் கூறியுள்ளார்.

பின்னர் தான் இறந்ததாக  கூறபட்ட நிலையில் தனது பெற்றோரை காணவே வந்ததாக கூறியுள்ளார். இந்நிலையில் வாரிஷாவை  கொடுமைப்படுத்தியதற்காக  அவரது கணவர் மற்றும் மாமியார் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் சூட்கேஸில் உயிரிழந்தநிலையில்  இருந்த அந்த பெண் யார் என போலீசார்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.