ஒட்டுமொத்த மாநிலமும் பிரார்த்தனை.! 104 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுவன்.!

ஒட்டுமொத்த மாநிலமும் பிரார்த்தனை.! 104 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுவன்.!


young boy saved from deep well

சத்தீஸ்கர் மாநிலம் ஜாங்கிரி - ஷம்பா மாவட்டத்தில் உள்ள பிஹ்ரிட் கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ராகுல். கடந்த கடந்த 4 நாட்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு பின்புறம் பயன்பாடற்ற நிலையில் இருந்த 80 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் சிறுவன் ராகுல் தவறி விழுந்தான்.

இது குறித்து தகவலறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் ஜேசிபி இயந்திரம் மூலம் சுரங்கம் தோண்டப்பட்டு, மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.

இதனையடுத்து 104 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுவன் ராகுலை உயிருடன் மீட்ட மீட்பு படையினர், சுரங்கம் வழியே வெளியே கொண்டு வந்தனர். உடனடியாக அந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அனைவரின் பிரார்த்தனையாலும், மீட்புக் குழுவினரின் இடைவிடாத அர்ப்பணிப்பு முயற்சியாலும், ராகுல் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்று சட்டீஸ்கர் முதலமைச்சர் அவரது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.