இந்தியா

திருமணமான பெண்ணுக்கு 21 வயது இளைஞன் மீது ஏற்பட்ட காதல்.! நண்பர்களுடன் சேர்ந்து இளைஞன் செய்த கொடூரம்.! பதறவைக்கும் சம்பவம்.!

Summary:

டெல்லியில் இளைஞரை திருமணம் செய்ய வற்புறுத்திய பெண்ணை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியை சேர்ந்த சாகிப் கான் என்பவருக்கு 32 வயது நிரம்பிய ஹீனா என்ற பெண்ணுடன் திருமணமாகி இருவரும் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு பழக்கமான சுமித் குமார் என்ற 21 வயது இளைஞன் இவர்களுடன் அதே வீட்டில் வசித்து வந்துள்ளார். 

இந்நிலையில் ஹீனா மற்றும் சுமித் இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். இளைஞன் மீது அதிக காதல் கொண்ட ஹீனா, நான் என் கணவரை பிரிந்துவிடுகிறேன். நீ என்னை திருமணம் செய்து கொள் என்று சுமித்தை கட்டாயப்படுத்தி வந்துள்ளார். 

ஆனால் ஏற்கனவே திருமணமான மற்றும் தன்னை விட 11 வயது மூத்தவரான ஹீனாவை மணக்க முடியாது என சுமித் மறுத்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் சண்டை ஏற்பட்டு வந்தது. இதனால் அந்த இளைஞன் ஹீனாவை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

இதனையடுத்து சுமித் அவனது நண்பர்கள் மூன்று பேருக்கு ரூ 1 லட்சம் பணம் கொடுத்து, மேலும் ஹீனா வீட்டில் நிறைய பணம், நகைகள் இருப்பதாகவும் அவரை கொலை செய்த பின்னர் அதை நீங்களே வைத்துக்கொள்ளலாம் என நண்பர்களிடம் கூறியிருக்கிறார். இந்தநிலையில் சாகிப் இல்லாத சமயத்தில் சில தினங்களுக்கு முன்னர் ஹீனாவை கழுத்தை நெரித்துள்ளனர். மேலும், சுமித் கத்தியை வைத்து ஹீனா கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

இதை தொடர்ந்து வீட்டில் இருந்த பணத்தை எடுத்து கொண்டு அனைவரும் தப்பினர். ஆனால் தன் மீது யாருக்கும் சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக, சுமித் மீண்டும் அந்த வீட்டுக்கு வந்து இரத்த வெள்ளத்தில் கிடந்த ஹீனாவை மருத்துவமனைக்கு தூக்கி சென்றார். அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். போலீசார் சுமித்திடம் விசாரித்த போது பயத்தில் நடந்த அனைத்தையும் அவர் ஒப்பு கொண்டார். இதனையடுத்து சுமித் மற்றும் அவரின் மூன்று நண்பர்களையும் போலீசார் கைது செய்தனர்.


Advertisement