13 வருட காதல்.! நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகளுக்கு திருமணம்.! மாப்பிள்ளை யார் பார்த்தீங்களா!!
அடேங்கப்பா..! ஜியோ நிறுவன உரிமையாளர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.? உலகின் 4வது பணக்காரராக முன்னேற்றம்.!

ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானி உலகின் நான்காவது பணக்காரராக மாறியுள்ளார்.
இந்தியா மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் பிரபலமான இந்திய நிறுவனங்களில் ஒன்று ரிலைன்ஸ் நிறுவனம். இதன் தலைவர் முகேஷ் அம்பானி. பல்வேறு துறைகளில் கொடிகட்டி பறக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கொரோனா ஊரடங்கிலும் பலகோடிகளை சம்பாதித்து வருகிறது.
கொரோனா ஊரடங்கால் பல்வேறு தொழில்கள், நிறுவனங்கள் கடும் இழப்புகளை சந்தித்துள்ள நிலையில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு மட்டும் ஏறிக்கொண்டே செல்கிறது. இதன் காரணமாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கு அடுத்தபடியாக உலகளவில் நான்காவது பெரிய பணக்காரராக மாறியுள்ளார் முகேஷ் அம்பானி.
அம்பானியின் நிகர சொத்து மதிப்பு 326 மில்லியன் டாலர் அதிகரித்து 80.2 பில்லியன் டாலராக உள்ளது. அதாவது இந்திய ரூபாயில் 6.04 லட்சம் கோடிகள் ஆகும். இதற்கு முன்னதாக நான்காவது இடத்தில் இருந்த எல்.வி.எம்.ஹெச் தலைவரான அர்னால்ட்டின் நிகர மதிப்பு 1.24 டாலர் குறைந்ததை அடுத்து அவர் ஐந்தவாது இடத்திற்கு சென்றுள்ளார்.
187 பில்லியன் டாலருடன் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்திலும், 121 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்புடன் மைக்ரோசாப்டின் பில் கேட்ஸ் இரண்டாவது இடத்திலும், 102 பில்லியன் டாலர் சொத்துடன் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இவர்களுக்கு அடுத்ததாக 80.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 4வது இடத்திற்கு முன்னேறினார் முகேஷ் அம்பானி.