தனது 2 அப்பாவி மகன்களுடன் 200 கிலோமீட்டர் நடை பயணம்..! லாரிக்கு அடியிலும், திறந்த இடங்களிலும் இரவைக் கழித்த சோக சம்பவம்..!



Women walked 200 km with her kids

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா காரணமாக பெரும்பாலான நாடுகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலும் மூன்று கட்டமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தற்போது நான்காவது முறையும் நீட்டிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

ஊரடங்கு காரணமாக வெளிமாநிலங்களில் மாட்டிக்கொண்ட தொழிலார்கள் போக்குவரத்துக்கு வசதி நிறுத்தப்பட்டுள்ளதால் நடந்தும், சைக்கிளில் சென்றும் பல நூறு கிலோ மீட்டர்களை கடந்து வருகின்றனர். இதனால் சில இடங்களில் சில இறப்புகளும் நடந்துள்ளது.

இந்நிலையில், பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளை அழைத்துக்கொண்டு பலநூறு கிலோமீட்டர் தூரத்தை நடந்தே கடந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உச்சி வெயிலில் லாரி போன்ற வாகனங்களுக்கு அடியில் அமர்ந்தும், இரவு நேரங்களில் திறந்த இடங்களில் படுத்து உறங்கியும் தங்கள் சொந்த ஊரை அவர்கள் அடைந்துள்ளனனர்.