
தனது சகோதரரின் திருமண விழாவில் பெண் தாசில்தார் ஒருவர் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகிவர
தனது சகோதரரின் திருமண விழாவில் பெண் தாசில்தார் ஒருவர் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அதிகமாகிவரும்நிலையில் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் திருமணம் உட்பட அனைத்து நிகழ்வுகளுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒடிசாவை சேர்ந்த பெண் தாசில்தார் ஒருவர் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி, தனது சகோதரத்தின் திருமணத்தில் நடனமாடியுள்ளார், இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் வைரலானது.
கொரோனா ஊரடங்கின்போது திருமணத்தில் பெங்கேற்பவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும், தனி மனித இடைவெளியை பின்பற்றவேண்டும் என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளநிலையில், அரசாங்க அதிகாரியே அந்த கட்டுப்பாடுகளை மீறி நடந்துகொண்டுள்ளார். இந்நிலையில் குறிப்பிட்ட அந்த அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Advertisement
Advertisement