குழந்தையை பிறப்பதற்கு முன்பே கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாய்..! குழந்தையை பிறந்ததுகூட தெரியாத நிலையில் முதல் முறையாக குழந்தையை வீடியோ காலில் பார்த்த சம்பவம்.!Women see new born baby on video call

கொரோனாவால் பாதிக்கப்பட கர்ப்பிணி பெண் ஒருவர் குழந்தை பெற்றெடுத்தநிலையில் குழந்தை அவரிடம் இருந்து பிறக்கப்பட்டதை அடுத்து தனது குழந்தை இறந்துவிட்டதாக நினைத்து அந்த பெண் கதறி அழுதுள்ளார்.

ராஜ்கோட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நடைபெற்ற சம்பவம் இது. சில வாரங்களுக்கு முன்னர் பெண் ஒருவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையியல் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் அந்த பெண் தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு பிரசவம் நடைபெற்றது.

corono

பிரசவம் முடிந்த பிறகு மயக்கத்தில் இருந்த அந்த பெண் தனது அருகில் குழந்தை இல்லாததை பார்த்து குழந்தை இறந்துவிட்டதாக நினைத்து கதறி அழுதுள்ளார். அதன்பிறகு மருத்துவர்கள் அந்த பெண்ணை தேற்றி, அவரது குழந்தையை வீடியோ காலில் காட்டிய பிறகே அந்த பெண் சற்று நிம்மதியடைந்தார்.

இதில் மேலும் கொடுமையான விஷயம் என்னவென்றால் அந்த பெண்ணின் தாய்க்கும் கொரோனா பாதிப்பு இருக்கும் நிலையியல், தனது மகள் தாய் ஆனது கூட தெரியாத நிலையில் அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.